நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்றைய செய்தியாளர் சந்திப்பில் ஆப்ரேஷன் சிந்தூர் 100 சதவீகிதம் வெற்றி என்று பூரிப்புடன் பேசினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்:

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி, வரும் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத் தொடரில் 8 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் கூட்டத்தொடருக்கு முன்பதாக பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இந்தியாவின் இராணுவ வலிமை:

"இந்த மழைக்கால கூட்டத்தொடர் வெற்றியின் கொண்டாட்டம். இந்தியாவின் இராணுவ வலிமையை உலகம் முழுவதும் கண்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் இந்திய இராணுவத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 100% அடையப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரில், பயங்கரவாதிகளின் முக்கிய தலைவர்களின் வீடுகள் 22 நிமிடங்களுக்குள் தரைமட்டமாக்கப்பட்டன."

ஆப்ரேஷன் சிந்தூர் 100% வெற்றி:

ஆபரேஷன் சிந்தூர்'-ல் முழுமையான வெற்றியைப் பெற்றது. வெறும் 22 நிமிடங்களுக்குள், முக்கிய பயங்கரவாதத் தலைவர்களின் வீடுகள் வீழ்த்தப்பட்டன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த புதிய வடிவ இராணுவ சக்தியால் உலகம் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளது. சமீபத்தில், உலகத் தலைவர்களுடனான எனது தொடர்புகளில், இந்தியாவின் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மீதான ஆர்வமும் போற்றுதலும் அதிகரித்து வருவதை நான் கவனித்தேன்."