<p>நாளை மறுநாள் அதாவது மே 30ஆம் தேதி கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி அன்று பிற்பகல் படகு மூலம் விவேகானந்தர் நினைவு பாறைக்கு சென்று தியான மண்டபத்தில் தியானம் செய்யவுள்ளார். மேலும், ஜூன் மாதம் 1ம் தேதி தியானத்தை முடித்துவிட்டு விவேகானந்தர் நினைவுப் பாறை விட்டு வெளியே வந்து, பின்னர் டெல்லி புறப்பட்டுச் செல்லவுள்ளார். </p>
<p>இதில் 30ஆம் தேதி மாலையில் இருந்து 1ஆம் தேதி காலை வரை தியானம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இரண்டு இரவு ஒரு பகல் முழுவதும் தியானம் செய்யவுள்ளார். </p>