Places With Best AQI: ஏலேய் நல்ல காற்று வேணுமா?. தமிழ்நாட்டில் இங்கு தான் கிடைக்கும்.. வெளியான தகவல்

4 weeks ago 3
ARTICLE AD

கடந்த சில நாட்களாகவே டெல்லியில் காற்றின் தரமானது மிக மோசமாக இருந்து வருகிறது,  குறிப்பாக கடந்த சில நாட்களாக காற்றின் தரக் குறியீடு (AQI) 450 ஐத் தாண்டியுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் முககவசம் அணிந்து தான் வெளியே செல்லும் சூழல் உள்ளது.

இதனால் தரமான காற்று என்பது கேள்விக்குறியாக உள்ளது. அந்த வகையில் இந்தியாவின் காற்றின் தரம் நன்றாக உள்ள ஐந்து நகரங்களை பற்றிக் காண்போம்.

1. ஷில்லாங்க், மேகாலயா – AQI: 12

‘கிழக்கு ஸ்காட்லாந்து’ என்று அழைக்கப்படும் ஷில்லாங்க், இந்தியாவின் மிகத் தூய்மை வாய்ந்த நகரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. பைன் காடுகள், பனித்துளி நிறைந்த காலை பொழுதுகள், மலைத் தவழும் காற்று, இவை அனைத்தும் இந்த நகரத்தை இயற்கையின் சொர்க்கமாக மாற்றுகின்றன. வோர்ட்ஸ் ஏரி, லைட்லம் கன்யன் போன்ற இடங்கள் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் முக்கியக் காரணங்கள். இங்கு சில நேரங்களில் AQI 12 வரை குறையும்.

2. ஐசால், மிசோரம் – AQI: 13

மிசோ மலைத் தொடரின் மேற்பகுதியில் அமைந்துள்ள ஐசால், அமைதியும் நல்ல காற்றை தேடுபவர்களுக்கு சொந்த ஊர் போன்ற உணர்வைத் தரும். பெரும்பாலான நாட்களில் காற்றின் தரம் இங்கு AQI 15க்குக் கீழே இருக்கும். இந்நகரில்  வளைந்து செல்லும் தெருக்கள், கைத் தொழில் கடைகள் மற்றும் மலைப்பகுதியின் நிலையான குளிர்ச்சி தன்மை, காற்று தனிமனிதருக்குச் சிறந்த அமைதியை அளிக்கிறது.

3. மடிக்கேரி (கூர்க்), கர்நாடகா – AQI: 12–20

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து வார இறுதி பயணத்திற்கு ஏற்ற சிறந்த இடம் மடிகேரி. அடர்ந்த பசுமை, மழை நனையச் செய்யும் காடுகள் மற்றும் குறைந்த வாகன நெரிசல்—இவை அனைத்தும் இங்குள்ள காற்றை இயற்கையாகவே சுத்தமாக வைத்திருக்கின்றன. அப்பி நீர்வீழ்ச்சி, ஸ்பைஸ் தோட்டங்கள் மற்றும் வாசனை மெல்ல வீசும் காபி தோட்டங்கள் மடிக்கேரியை ‘நேசத்தின் நச்சென்று உணர்த்தும்’ இடமாக மாற்றுகின்றன.

4. கோகர்ணா, கர்நாடகா – AQI: 45

மலையை விட கடலைப் பிடித்தவர்களுக்கு கோகர்ணா சிறந்த தேர்வு. இங்கு காற்றின் தரவு AQI 50க்குக் கீழே நிலைத்து இருக்கும் இந்த கடற்கரை நகரம் அமைதியும் சுத்தமான காற்றும் தருகிறது. ஓம் பீச், கடற்கரையில் யோகா, அலைகளை பார்த்தபடி படுத்து ஓய்வெடுக்கும் அனுபவம். இவை அனைத்தும் கோகர்ணாவை மனதுக்கு நிம்மதி தரும் இடமாக மாற்றுகின்றன.

5. திருநெல்வேலி, தமிழ்நாடு – AQI: 33

இந்த லிஸ்டில் ஆச்சர்யமாக, தென் தமிழ்நாட்டில் அமைந்துள்ள  திருநெல்வேலி அல்வாவுக்கு மிக சிறப்பு வாய்ந்தது., மிகவும் சுத்தமான காற்றைக் கொண்ட பகுதிகளில் ஒன்றாக விளங்குகிறது. இங்கு காற்றின் AQI 33 மட்டுமே உள்ள திருநெல்வேலி, கோயில்களின் அமைதி, அழகிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் மாலையில் சுடச்சுட கிடைக்கும் சுட சுட ‘அல்வா’—இவை அனைத்தும் மக்களுக்கு சுகமான அனுபவத்தை அளிக்கின்றன. குளிர் இல்லாத பசுமையான நகரம் என்பதே இதன் சிறப்பாக உள்ளது.

Read Entire Article