தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு புதியதாக ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பானுமதியின் திட்டத்தை முறியடித்து, இசை நிச்சயத்தை நிறுத்திய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

காதலிக்கும் ராகவ் - வர்ஷினி:

அதாவது சுப்ரதா தேவி, பானுமதி மற்றும் அவளது மகள் தீப்தியை வெளியே போங்க என்று மண்டபத்தை விட்டு வெளியே துரத்த இசை சுப்ரதாவிடம் ராகவ் மற்றும் வர்ஷினி என இருவருக்கும் ஒருத்தர ஒருத்தர் ரொம்ப பிடிச்சிருச்சு. இரண்டு பேரும் மனதார காதலிக்கறாங்க, அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்கணும் நீங்க தான் மனசு வைக்கணும் என்று சொல்லி கேட்கிறாள்.

அதன் பிறகு வர்ஷினியை மணமகளாக ஏற்று மேடைக்கு அழைத்து வருகிறாள். வர்ஷினி மற்றும் ராகவ் என இருவருக்கும் நல்லபடியாக நிச்சயதார்த்தம் நடந்து முடிய இசை சந்தோஷம் அடைகிறாள். இதே நேரத்தில் விஷால் இசையை கூப்பிட்டு தனது காதல் விஷயத்தை சொல்ல இதைக்கேட்டு இசை அதிர்ச்சி அடைந்து கண் கலங்குகிறாள்.

இசையைப் பார்த்த விஷால் அதிர்ச்சி:

ருக்குமணிக்கு விஷயம் தெரிய வர அவள் உன் நிச்சயம் நின்னு போனால் வர்ஷினி கல்யாணமும் நின்னு போயிடும். அதனால இந்த கல்யாணம் நடக்கணும் என்று சொல்லி இசையை நிச்சயதார்த்த மேடைக்கு ஏற்ற விஷால் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். பிறகு சுப்ரதா விஷாலிடம் மோதிரத்தை கொடுத்து இசைக்கு போட்டு விட சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.