தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் சுபத்ரா தேவி வீட்டை விட்டு காணாமல் போன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

பொய் சொல்லும் ஸ்ரீஜா:

அதாவது, இசை சுபத்ரா தேவியை தேடி ஒரு கோவிலுக்கு செல்ல அங்கு அவளைப் பார்த்து வீட்டிற்கு அழைத்து வருகிறாள்.
சுபத்ரா வீட்டுக்கு வந்ததும் விஷாலின் பாட்டி ஸ்ரீஜாவை கூப்பிட்டு விஷால விட்டுட்டு போயிடு உனக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்றாலும் தருகிறோம் என்று சொல்கிறாள்.

ஆனால் சுபத்ரா வேண்டாம் அத்தை நம்ம வீட்லயும் பொண்ணு இருக்கு என்று சொல்லி தடுத்து நிறுத்துகிறாள். பிறகு ஸ்ரீஜாவிடம் விசாரிக்க அவள் தனக்கு அப்பா இல்லை அத்தை மாமா தான் வளர்த்ததாக பொய் சொல்கிறாள்.

ஆட்கள் ஏற்பாடு:

இந்த விஷயம் பானுமதிக்கு தெரிய வர அவள் ஸ்ரீஜாவின் அத்தை மாமாவாக நடிக்க ஆட்களை ஏற்பாடு செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.