Parijatham Serial: கொலையை நேரில் விசாரிக்கும் விஷால்! கொலையாளியை கண்டுபிடிப்பது எப்போது?

2 months ago 5
ARTICLE AD

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரிஜாதம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரம்யாவின் மரணத்தில் விஷாலுக்கு சந்தேகம் எழுந்த நிலையில், இன்று நடக்கப்போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதிர்ச்சியான விஷால்:

அதாவது, விஷால் நேராக ரம்யா வீட்டிற்குச் சென்று நடந்த விஷயம் குறித்து விசாரிக்க, ஒரு ஆக்சிடென்ட் சிக்கிக்கொண்டு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட பிறகு யாரோ ஒருவர் முகமூடி அணிந்து வந்து கொலை செய்துவிட்டு சென்றதாக சொல்ல அதைக் கேட்டு விஷால் அதிர்ச்சி அடைகிறான்.

பிறகு ஹாஸ்பிடலுக்கு வந்து சிசிடிவி காட்சிகளை பார்க்க முகமூடி அணிந்த நபர் ஒருவர் ரம்யாவின் ரூமுக்குள் சென்று வந்தது தெரிய வருகிறது. போலீஸ் அந்த முகமூடி அணிந்த நபரை நான் தேடி வருவதாக சொல்கின்றனர்.

ஸ்ரீஜாவைத் திட்டிய சுபத்ரா:

அடுத்து இங்கே வர்ஷினி ஸ்ரீஜா ரூமுக்கு வந்து கல்யாணம் முடிகிற வரைக்கும் நான் இந்த ரூம்ல தான் இருக்க போறேன் என்று சொல்கிறாள். உடனே ஸ்ரீஜா சுபத்ராவிடம் முறையிட்டு அவளை மேலே அழைத்து வர ரூமில் வர்ஷினி இல்லாமல் இருக்கிறாள். நான் என் ரூம்ல தான் இருக்கேன் அப்படி இருக்கும்போது இவங்க எதுக்கு இப்படி பண்றாங்க? என்று கோர்த்து விட சுபத்ரா ஸ்ரீஜாவை திட்டுகிறாள்.

இதையடுத்து விஷால் தனது போலீஸ் நண்பனை சந்தித்து எனக்கு ஒரு உதவி வேணும், நீ ஃப்ரீ ஆகிட்டு சொல்லு, உன்கிட்ட பேசணும் என்று சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய பாரிஜாதம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Read Entire Article