<p>சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமான பராசக்தி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. டான் பிக்ச்சர்ஸ் தயரித்து சுதா கொங்காரா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த மாணவ போராட்டங்களை மையமாக வைத்து இப்படத்தின் கதை அமைந்துள்ளது. அதர்வா , ரவி மோகன் , ஶ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். </p>
<h2>காலை காட்சிகள் ரத்து </h2>
<p>பராசக்தி படத்தின் முதல் காட்சிகள் வெளிநாடுகளில் இந்திய நேரப்படி அதிகாலை 6 மணி தொடங்கியுள்ள. இந்தியாவில் தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கும் பிற மாநிலங்களில் காலை 7 மற்றும் 8 மணிக்கு சிறப்பு காட்சிகள் தொடங்க இருந்தன. இப்படியான நிலையில் அனைத்து மாநிலங்களிலும் அதிகாலை 7 மற்றும் 8 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்க இருக்கிறது. சிறப்பு காட்சிகளுக்கு டிக்கெட் புக் செய்திருந்த ரசிகர்கள் இதனால் வருத்தமடைந்துள்ளார்கள்</p>
<p><iframe class="vidfyVideo" style="border: 0px;" src="https://tamil.abplive.com/web-stories/health/benefits-of-eating-ghee-and-dates-everyday-245922" width="631" height="381" scrolling="no"></iframe></p>