Palani temple land scam : ரூ.100 கோடி பழநி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக

3 months ago 7
ARTICLE AD

பழநி கோயில் நிலம் மோசடி

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், எந்தவித ஊழல், லஞ்சம் இல்லாத வகையில் ஆட்சி இருக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பழநி கோயில் நிலத்தை முறைகேடாக 100 கோடிக்கு மேலான சொத்தை வெறும் 2 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்க்கு தொடர்பு இருப்பதாகவும் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து தன் மீது அவதூறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து போலீசிடம் அளிக்கப்பட்ட  புகாரையடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த பரபரப்பான நிலையில் பழநி கோயில் நிலம் விற்பனை எப்படி நடைபெற்றது என திமுக கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள பதிவில்,இது ஒரு சாதாரண நிர்வாகத் தவறு அல்ல; மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு Heist என குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் ஒரு 10 நாட்களில் பழநி கோயில் நிலத்தை பத்திர பதிவு எப்படி நடைபெற்றது என்பதற்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

Fastest 100 Crores Scam .
Running Successfully 🏃🏃🏃🏃 pic.twitter.com/r5Eo8YTd21
— DMK IT WING (@DMKITwing) July 16, 2026

02 ஜூலை 2026

அறநிலையத் துறை தக்கார் கடிதம்

பழனி கோயில் இணை ஆணையர் (JC) மாரிமுத்து, "இந்த நிலத்திற்கு நான்தான் தக்கார், நீதிமன்ற உத்தரவு இருப்பதால் இதை யாருக்கும் பத்திரப்பதிவு செய்யக் கூடாது" என்று சார்பதிவாளருக்கு ஆட்சேபனைக் கடிதம் எழுதுகிறார்.

03 ஜூலை 2026

பத்திரத் தாக்கல் & பணியிட மாற்ற உத்தரவு

தனியார் தரப்பு நிலப் பதிவு ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்கிறது. அதே நாளில், ஆட்சேபனைக் கடிதம் எழுதிய இணை ஆணையர் மாரிமுத்துவை சென்னைக்கு தற்காலிக பதவி உயர்வில் மாற்றுவதற்கான கோப்பு உத்தரவை அறநிலையத்துறை பிறப்பிக்கிறார்.

06 ஜூலை 2026

திட்டமிட்ட விடுப்பு & முறைகேடான பதிவு

வழக்கமான சார்பதிவாளர் விடுப்பில் செல்ல, கொடைக்கானலில் இருந்து ஜஸ்டின் மணிகண்டன் என்ற சார்பதிவாளர் ஒரு நாள் பொறுப்பாக வரவழைக்கப்பட்டு, ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் ரூ. 2 கோடிக்கு முறைகேடாகப் பதிவு செய்யப்படுகிறது.

09 ஜூலை 2026
பதவி உயர்வு அமலாக்கம்

நிலப்பதிவு முடிந்த மூன்றாவது நாளில், இணை ஆணையர் மாரிமுத்துவின் பதவி உயர்வு ஆணை முறைப்படி அமல்படுத்தப்பட்டு அவர் சென்னைக்கு மாற்றப்படுகிறார்.

14 ஜூலை 2026

நீதி மன்றத்தின் கண்டனம் & ரத்து

விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, திட்டமிட்டு விடுப்பு கொடுத்து மாற்று அதிகாரி மூலம் இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளது என உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து, இந்த பத்திரப்பதிவை ரத்து செய்கிறது.

Read Entire Article