Palani Murugan Temple: பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை - வசூல் எவ்வளவு தெரியுமா?

1 year ago 6
ARTICLE AD

அறுபடை வீடுகளில்  மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

விழாக்காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்துவிட்டு உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில், கோயில் வளாகத்தில் பல்வேறு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், அதில் உள்ள பணம், தங்கப் பொருட்கள் எண்ணி அளவிடப்பட்டு வருகிறது.

Electricity Bill: ஜூலை 1-ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்வா? தமிழ்நாடு அரசு சொன்னது என்ன..?

இந்த நிலையில் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு விடுமுறை காரணமாக பக்தர் வருகை அதிகரித்தது. கோயிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி விட்டு சென்றனர். கடந்த 20 நாட்களாக பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மலைமீது உள்ள  மண்டபத்தில்  வைத்து தரம் பிரித்து எண்ணப்பட்டது.

Pondicherry Poisonous Gas : கழிவறையில் விஷவாயு தாக்குதல் - புதுச்சேரியில் 3 பெண்கள் உயிரிழப்பு, பொதுமக்கள் வெளியேற்றம்

அதில் ஒரு கோடியே 66 இலட்சத்து 26 ஆயிரத்து 850 ரூபாய் கிடைத்தது. தங்கம் 778 கிராமும், வெள்ளி 12,039 கிராமும் கிடைத்தது.  மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டு கரன்சிகள் 427 ம் கிடைத்தன. உண்டியல் எண்ணிக்கையில் பழனி கோயில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். உண்டியல் எண்ணும் பணி ஆனது 10, 11, 12 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read Entire Article