வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்டவைகளால் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும்போது உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய உணவு பாதுகாப்புத்துறை அங்கீகரித்துள்ள ஓஆர்எஸ் மற்றும் ஓஆர்எஸ்எல் மட்டுமே விற்க வேண்டும் என்று தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோடை காலத்தில் கடும் வெப்பத்தால் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும். இதற்காக தண்ணீர், பழச்சாறுகளை அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், ஓஆர்எஸ் மற்றும் ஓஆர்எஸ்எல்-ஐ அருந்துவார்கள்.

இந்த நிலையில், ORS மற்றும் ORSL வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விற்பனை மேற்கொள்ள மருந்து கடை உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புதுறை எச்சரித்துள்ளது.

வயிற்றுப்போக்கு, வாந்தி, உள்ளிட்டவைகளால் நீர்ச்சத்து இழப்பு ஏற்படும்போது உலக சுகாதார அமைப்பு மூலம் அங்கீகரித்துள்ள ORS- மட்டுமே மருந்தகத்தின் விற்பனையாளர்கள் வழங்க வேண்டும். FSSAI(இந்திய உணவு பாதுகாப்புதுறை) மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ள ORSL, ORSL Plus, ORS Fit, பெயர்களில் பழச்சாறு அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தி அனைத்து மருந்து கடை உரிமையாளர்கள் விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்துள்ளது என்று கூறி ORSL உள்ளிட்ட பெயர்களில் ஏதேனும் ORSL உள்ளிட்டவை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட மருந்தகத்தின் மீது அதன் உரிமையாளர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெப்ப அலையில் குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டால் பெற்றோர்கள் கவனமாக உலக சுகாதார அமைப்பு (WHO) என்று எழுதப்பட்டுள்ள ORS-யை வாங்கிக் கொடுக்கும்படி தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

ஓஆர்எஸ் மற்றும் ஓஆர்எஸ்எல் விற்கப்படும்போது நிறுவனத்தின் பெயர், தயாரிக்கப்படும் இடம், காலாவதியான தேதி, உரிமம் உள்ளிட்டவை இடம்பெற வேண்டும் என்றும் பொதுமக்கள் இரண்டுக்கும் வித்தியாசத்தை கண்டறிந்து வாங்கிக் கொண்டு பகிர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் ஓஆர்எஸ் மற்றும் ஓஆர்எஸ்எல் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.