<p>இந்திய கர்னல் சோஃபியா குரேஷி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது ’’பாகிஸ்தான் ராணுவ தளங்கள் எதுவும் குறிவைக்கப் படவில்லை. மே 7ஆம் தேதி நள்ளிரவு 1.05 முதல் 1.30 வரை 25 நிமிடங்களுக்கு, 9 தீவிரவாத முகாம்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டது.</p>
<p>பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இந்தத் தாக்குதல் நடந்தது. குறிப்பாக சியால்கோட்டில் உள்ள தீவிரவாத முகாம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கோட்லி தீவிரவாத முகாம் குண்டு வீசி அழிக்கப்பட்டது. மொத்தமாக பகவல்பூர், முசாராபாத், கோட்லி, முரிட்கே, உள்ளிட்ட 9 தீவிரவாத முகாம்கள் ஏவுகணை மூலமாக தாக்கி அழிக்கப்பட்டன. </p>
<p>இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டால், அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது’’ என்று தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.</p>
<p> </p>