அண்ணா பல்கலைக்கழகத்தில் MBA பட்டப் படிப்பில் சேர இணையவழியில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்கு ; மார்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ளவர்கள், onlinecde.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக இணையம் மூலம் கற்கும் எம்பிஏ படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இரு பிரிவுகளில் பிசினஸ் அனலிட்டிக்ஸ், பொது மேலாண்மை எம்பிஏ படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கு ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் மற்றும் தொலைதூரக் கல்வி வாரியம் ஆகிய இரண்டும் அங்கீகாரம் வழங்கியுள்ளன.
இந்த எம்பிஏ படிப்பில் இளங்கலைப் படிப்பை முடித்த பட்டதாரிகள் சேரலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எம்பிஏ படிப்பில் சேருவது எப்படி?
எம்பிஏ படிப்பில் சேர விரும்பும் தேர்வர்கள், ஆன்லைனில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் (Online Education Entrance Test - OEET) தேர்ச்சி பெற வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வர்கள் https://onlinecde.annauniv.edu என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இணையம் மூலம் விண்ணப்பிக்க, மார்ச் மாதம் 22-ம் தேதி கடைசித் தேதி ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நுழைவுத் தேர்வு மார்ச் 29-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
எம்பிஏ பொது மேலாண்மை படிப்பு குறித்த முழுமையான விவரங்களை https://onlinecde.annauniv.edu/pluginfile.php/12843/mod_resource/content/1/MBA_General_Management-Brochure_AY2022.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, அதில் உள்ள குறிப்பேட்டைக் காணலாம்.
அதேபோல, https://onlinecde.annauniv.edu/pluginfile.php/12842/mod_resource/content/1/MBA_Business_Analytics-Brochure_AY2022.pdf என்ற குறிப்பேட்டில் இருந்து எம்பிஏ பிசினஸ் அனலிட்டிக்ஸ் குறித்து அறியலாம்.
கூடுதல் தகவல்களுக்கு:
தொலைபேசி எண்கள்: 044-22357210, 044-22357224
இ மெயில்:
[email protected]
இணைய முகவரி: https://onlinecde.annauniv.edu