OnePlus 13 மற்றும் OnePlus 13R மாடல் ஃபோன்களுக்கு 180 நாட்கள் ஃபோன் ரிப்ளேஸ்மெண்ட் திட்டத்தை வழங்குவதாக ஒன் ப்ளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒன்ப்ளஸ் 13-வது சீரிஸ் சந்தையில் வெளியாகியுள்ளது. பல புதிய அப்டேட்கள், தொழில்நுட்ப அம்சங்கள் புதிய மாடலில் வழங்கப்பட்டிருக்கிறது. 6,000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 15,OxygenOS 15 உள்ளிட்ட பல வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

180 நாட்கள் ’Phone Replacement’ திட்டம்:

ஒன்ப்ளஸ் 13 மற்றும் ஒன் ப்ளஸ் 13R இரண்டு ஸ்மாட்ஃபோன்களை ஜனவரி -10ம் தேதி முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை வாங்குபவர்களுக்கு 180 நாட்கள் ரீப்ளேஸ்மெண்ட் திட்டம் கொடுக்கப்படும். இதற்கு கூடுதலாக எந்தவித தொகையும் செலுத்த தேவையில்லை. பிப்ரவரி 14-ம் தேதி ஃபோன் வாங்குபவர்களுக்கு ஒன் ப்ளஸ் 13 ரூ.2,599-வும் ஒன் ப்ளஸ் 13R மாடலுக்கு ரூ.2,299வும் தொகை செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தி பெற்றால் கூடுதலாக மூன்று மாதங்களுக்கு சேவைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹார்டுவேர் தரத்தில் ஏதேனும் பிரச்சனை என்றால் இந்தத் திட்டத்தை பயன்படுத்தலாம். ஸ்க்ரீன், பேக் கவர், பேட்டரி, மதர்போர்டு ஆகியவற்றில் ஏதேனும் பிரச்சனையிருந்தால் ஒரு முறை டிவைஸ் ரிப்ளேஸ்மெண்ட் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

சிறப்புகள்:

ஒன்ப்ளஸ் 13 மற்றும் ஒன்ப்ளஸ் 13R இரண்டுமே கர்வ் டிஸ்ப்ளே கொண்டதுதான். இரண்டிலும் வட்ட வடிவ கேமரா டிசைன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள மாடல்களில் வீகன் லெதர், க்ளாஸ் என இரண்டு வகையான ஃபோன் கேஎஸ் உடன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. IP68 and IP69 அளவு டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் கொண்டது. இது ஒன் ப்ளஸ் 13R மாடலில் கிடைக்காது.

தொழில்நுட்ப சிறப்புகள் என்னென்ன?

ஒன்ப்ளஸ் 13 சீரிஸ் ஸ்மாட்ஃபோன்களில் 6,000mAh பேட்டரி, அதிக விரைவு சார்ஜிங், புதிய சிப்செட் ஆகியவற்றை கொண்டுள்ளது. oன் ப்ளஸ் 13 Snapdragon 8 Elite chipset, ஒன் ப்ளஸ் 13R Qualcomm’s Snapdragon 8 Gen 3 கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் OxygenOS 15 ஒ.எஸ். கொண்டுள்ளது. இரண்டிற்கும் 3-4 ஆண்டுகள் சாஃப்ட்வேர் அப்டேட் கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா சிறப்புகள் என்ன?

ஒன்ப்ளஸ் 13 50MP Sony LYT-808 ப்ரைமரி கேமரா, 50MP டெலிஃபோட்டோ லென்ஸ், 50MP அல்ட்ராவைட் சென்சார் கொண்டுள்ளது. OnePlus 13R மூன்று கேமராவுடன் வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை. 50MP ப்ரைமரி கேமரா, டெலிஃபோட்டீ லென்ஸ், 8MP அல்ட்ராவைட் லென்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விலை விவரம்:

ஒன்ப்ளஸ் 13 மாடல் 12GB + 256GB வேரியண்ட் ரூ. 69,999-க்கும் 16GB + 512GB வேரியண்ட் ரூ.76,999, 24GB + 1TB வேரியண்ட் ரூ. 89,999-க்கும் விற்பனையாகிறது.

ஒன்ப்ளஸ் 13R மாடல் 12GB + 256GB வேரியண்ட் ரூ.42,999-க்கும் 16GB + 512GB வேரியண்ட் ரூ.49,999-க்கும் விற்பனையாகிறது.

ஒன்ப்ளஸ் 13 ஸ்மார்ட்ஃபோம் விற்பனை ஜனவரி-10தேதியும் ஒன் ப்ளஸ் 13R மாடலின் விற்பனை ஜனவரி-13ம் தேதியும் தொடங்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது.