Odisha assembly Election Result 2024: ஒடிசாவில் 25 ஆண்டுகாலமாக நடைபெற்று வரும், நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது. அம்மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்றது. மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 74 தொகுதிகளை கைப்பாற்றினால், பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியும்.

இந்நிலையில் தற்போதைய சூழலில், பாஜக 82 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய ஆளும்கட்சியான பிஜு ஜனதா தளம் 45 தொகுதிகளிலும், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும் மற்றவை 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இதனால், 25 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் தலைமயிலான ஆட்சி, ஒடிசாவில் முடிவுக்கு வரும் ஏற்பட்டுள்ளது.