Ai+ நிறுவனம் நீண்ட நேரம் சார்ஜ் பேக்கப் இருக்கும் வகையில் Nova 2 Power 5Gஐ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் சிறப்புகளைப் பற்றிக் லாணலாம்.

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் இல்லாத கைகளே இல்லை என்ற அளவுக்கு அனைவரிடமும் இன்று மொபைல் போன் உள்ளது. ஆப்பிள் தொடங்கி விவோ, ஓப்போ, ஒன் பிளஸ், ரெட்மி, ரியல்மி என பல தரப்பட்ட ஸ்மார்ட்போன் கம்பெனிகள் சந்தையை ஆக்கிரமித்துள்ளது. தொழில்நுட்ப வசதிகள் ஸ்மார்ட்போனில் வந்தாலும் பேட்டரி பேக்கப் என்பது பலரையும் கவலைக்குள்ளாக்கும் விஷயமாக மாறியுள்ளது.

இப்படியான நிலையில் பேட்டரிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் Ai+ நிறுவனம் தனது Nova 2 ஸ்மார்ட்போன் வரிசையை விரிவுபடுத்தி தற்போது Nova 2 Power 5G என்ற மாடலை சந்தையில் களமிறக்கியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 7,000mAh பேட்டரி, 120Hz டிஸ்ப்ளே மற்றும் 5G இணைப்பு வசதி ஆகியவை உள்ளன.

Nova 2 Power 5G ஸ்மார்ட்போன்

இந்த Nova 2 Power 5G மாடலின் ஆரம்ப விலை ரூ. 17,000க்கும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களுக்கான வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அதிக விலைக்குள் நுழையாமல், நீண்ட நேர பேட்டரி பேக்கப் மற்றும் சிறப்பம்சங்களைத் தேடும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி Ai+ Nova 2 Power 5Gயின் 6 GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ. 16,699 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உயர் ரக 8 GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 17,999 ஆக விற்பனையாகிறது.

நோவா 2 பவர் 5ஜி ஸ்மார்ட்போனானது ப்ளூ ஃபியூஷன், ப்ளூ கோல்டு ஃபியூஷன், டீப் பர்ப்பிள், மிட்நைட் பிளாக் மற்றும் ஓஷன் கிரீன் ஆகிய ஐந்து கலர்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் 24 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் ஃபிளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுகச் சலுகையாக பேஸிக் மாடலை ரூ.1000 தள்ளுபடியில் ரூ.15,999 என்ற விலையில் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான விதிமுறைகளை அந்நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

இந்த Nova 2 Power 5G ஸ்மார்ட்போனில் 13 எம்பி செல்ஃபி கேமரா, 48MP சோனி IMX582 முதன்மை கேமரா மற்றும் 8MP அல்ட்ரா-வைட் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. பின்பு கேமரா 30fps வேகத்தில் 2K வீடியோ பதிவை ஆதரிக்கிறது. மேலும் 6nm மீடியாடெக் டைமென்சிட்டி 7100 சிப்செட் பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போனில் உள்ள பிரத்யேக மெமரி கார்ட் ஸ்லாட் 1TB வரை விரிவாக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது.