New SUV EV Cars: 2026ஐ மிரட்டப்போகும் 6 மின்சார எஸ்யூவி கார்கள்.. மரண வெயிட்டிங்!

2 months ago 12
ARTICLE AD

இந்தியாவில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. முன்னணி கார் நிறுவனங்களும் தற்போது மின்சார வாகனங்கள் தயாரிப்பில் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

அந்த வகையில், இந்தியாவில் நடப்பாண்டில் அறிமுகமாக உள்ள புதிய மின்சார எஸ்யூவி கார்களின் பட்டியலை கீழே காணலாம்.

1. Tata Punch EV Facelift:

டாடா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் Tata Punch. இந்த கார் பெட்ரோல் வேரியண்டிலும், மின்சார கார் வேரியண்டிலும் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், இதன் மின்சார காரான Tata Punch EV Facelift காரும் இந்தாண்டு அறிமுகமாக உள்ளது. வசீகரமான தோற்றம், மிகப்பெரிய டிஸ்ப்ளே வசதியுடன் இந்த கார் அறிமுகமாக உள்ளது.

2. Maruti Suzuki e Vitara:

மாருதி சுசுகியின் மிகவும் முக்கியமான படைப்பாக உள்ளது Maruti Suzuki e Vitara. இந்த கார் கடந்தாண்டு மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இந்தாண்டுதான் சந்தைக்கு விற்பனைக்கு வரும் என்று கருதப்படுகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 543 கிலோமீட்டர் மைலேஜ் தரும் ஆற்றல், 360 டிகிரி கேமரா, லெவல் 2 அடாஸ் வசதி, 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் என அனைவரையும் எதிர்பார்க்க வைத்துள்ளது. இதன் தொடக்க விலை ரூபாய் 17 லட்சம் ஆகும்.

3. Toyota Urban Cruiser Ebella:

டொயோட்டோ நிறுவனத்தின் முக்கியமான கார் Toyota Urban Cruiser. இந்த காரின் புதிய லேட்டஸ்ட் வெர்சனாக இந்த Toyota Urban Cruiser Ebella சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 8 வருட பேட்டரி வாரண்டி அளிக்கப்பட்டுள்ளது. மாருதி சுசுகியின் இ விதாராவிற்கு போட்டியாக இந்த கார் இருக்கும் என்று கருதப்படுகிறது.

4.Hyundai Compact EV:

ஹுண்டாய் நிறுவனத்தின் புதிய மின்சார காராக சந்தையில் அறிமுகமாக உள்ளது இந்த Hyundai Compact EV. இந்த மின்சார எஸ்யூவ கார் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. டாடா பஞ்ச் இவி காருக்கு போட்டியாக இந்த கார் சந்தையில் இறங்க உள்ளது. லெவல் 2 அடாஸ் வசதி உள்ளிட்ட பல்வேற வசதிகளுடன் களமிறங்க உள்ளது. இந்தாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் அறிமுகமாக உள்ளது.

5. Mahindra BE6 Rall-E:

எஸ்யூவி கார் என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது Mahindra தான். அவர்களின் புதிய படைப்பாக சந்தைக்கு வர உள்ளது Mahindra BE6 Rall-E. ஒரு முறை சார்ஜ் செய்தாலே 500 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் ஆற்றல் கொண்டது. மிகப்பெரிய சக்கரங்கள், வட்டமான முகப்பு விளக்குகள் என பல்வேறு சிறப்பம்சங்களுடன் வர உள்ளது.

6. Tata Avinya EV:

டாடா நிறுவனத்தின் புதிய மின்சார காராக நடப்பாண்டு சந்தையில் அறிமுகமாக உள்ளது Tata Avinya EV. ஜென் 3 ஸ்கேட்போர்ட் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் வசீகரமான தோற்றத்துடனும், பாதுகாப்பு வசதிகள், சிறந்த மைலேஜ் ஆகிய வசதிகளுடன் சந்தைக்கு வர உள்ள இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Read Entire Article