New Income Tax Bill 2025: 622 பக்கங்களை கொண்ட புதிய வருமான வரி மசோதா, எளிய விதிமுறைகள் மற்றும் பலவற்றிற்கான கடுமையான விதிகளை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

புதிய வருமான வரி மசோதா:

மொத்தமாக 622 பங்களில் 536 பிரிவுகளையும், 23 அத்தியாயங்களையும் கொண்ட, தெளிவான மற்றும் எளிமைப்படுத்தப்பட்ட வருமான வரி மசோதா 2025, இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதா இந்த மசோதா, கடந்த 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த, 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்திற்கு மாற்றாகும். இந்த சட்டம் காலப்போக்கில் திருத்தங்களுடன் பெரிதாகவும் சிக்கலானதாகவும் மாறிய நிலையில், புதிய மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில், வருமான வரிச் சட்டம், 1961 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி 'முந்தைய ஆண்டு' என்ற சொல்லை 'வரி ஆண்டு' என்று மாற்றுகிறது. மேலும், மதிப்பீட்டு ஆண்டு என்ற கருத்தும் நீக்கப்பட்டுள்ளது.

புதிய திருத்தங்கள் என்ன?

தற்போது, முந்தைய ஆண்டில் (எடுத்துக்காட்டாக 2023-24) ஈட்டிய வருமானத்திற்கு, மதிப்பீட்டு ஆண்டில் (எடுத்துக்காட்டாக 2024-25) வரி செலுத்தப்படுகிறது. இந்த முந்தைய ஆண்டு மற்றும் மதிப்பீட்டு ஆண்டு கருத்து நீக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்ட மசோதாவின் கீழ் வரி ஆண்டு என்று மட்டுமே இனி அழைக்கப்படும். வருமான வரி மசோதா, 2025, தற்போதைய வருமான வரிச் சட்டம், 1961 இன் 298 பிரிவுகளை விட அதிகமாக 536 பிரிவுகளைக் கொண்டுள்ளது. தற்போதுள்ள சட்டத்தில் 14 அட்டவணைகள் உள்ளன, அவை புதிய சட்டத்தில் 16 ஆக அதிகரிக்கும்.

இருப்பினும், அத்தியாயங்களின் எண்ணிக்கை 23 ஆகவே தக்கவைக்கப்பட்டுள்ளது. பக்கங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆறு தசாப்தங்களாக செய்யப்பட்ட திருத்தங்களை உள்ளடக்கிய தற்போதைய மிகப்பெரிய சட்டத்தின் கிட்டத்தட்ட பாதி ஆகும். 1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, அது 880 பக்கங்களைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

”இனி சட்ட திருத்தம் வேண்டாம்”

பிரிவுகளில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, வரி நிர்வாகத்திற்கான மிகவும் கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையை பிரதிபலிக்கிறது. இதில் நவீன இணக்க வழிமுறைகள், டிஜிட்டல் நிர்வாகம் மற்றும் வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கான நெறிப்படுத்தப்பட்ட ஏற்பாடுகள் ஆகியவை அடங்கும். அதேநேரம், பழைய சட்டத்தில் வருமான வரித் துறை பல்வேறு நடைமுறை விஷயங்கள், வரித் திட்டங்கள் மற்றும் இணக்க கட்டமைப்புகளுக்கு நாடாளுமன்றத்தை அணுக வேண்டியிருந்தது. இப்போது, CBDT அத்தகைய திட்டங்களை சுயாதீனமாக அறிமுகப்படுத்த அதிகாரம் பெற்றுள்ளது. இது அதிகாரத்துவ தாமதங்களைக் கணிசமாகக் குறைத்து வரி நிர்வாகத்தை மேலும் ஆற்றல் மிக்கதாக மாற்றுகிறது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திருத்தம் நடந்தது எப்படி?

வரி மொழியை எளிமைப்படுத்துதல், சிக்கல்கள் குறைப்பு, இணக்கக் குறைப்பு மற்றும் தேவையற்ற/காலாவதியான விதிகள் என நான்கு பிரிவுகளில் பொதுமக்களின் உள்ளீடுகள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்பட்டன. மேலும், வருமான வரிச் சட்டத்தை மறுஆய்வு செய்வது தொடர்பாக பங்குதாரர்களிடமிருந்து வருமான வரித் துறை 6,500 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது. அதனடிப்படையில் உருவாகியுள்ள மசோதா இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.