நீட் தேர்வில் தவறு இருந்தால் மத்திய அரசும் தேசியத் தேர்வுகள் முகமையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘’வழக்கு விசாரணையில், யாராவது தவறு இழைத்திருந்தால் அதை முழுமையாக ஆராய வேண்டும். 0.001 சதவீதம் அலட்சியம் இருந்தாலும் ஆராய வேண்டும். மோசடி செய்து மருத்துவர் ஆகும் ஒருவர், சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவார்? தனிநபர் ஒட்டுமொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறும் சூழலை யோசித்துப் பார்க்க வேண்டும்.

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக மத்திய அரசும் தேசியத் தேர்வுகள் முகமையும் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், ஜூலை 6ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.