NEET UG 2025: நீட் வினாத்தாள் தொடங்கி வெளியீடு வரை ஊழல்; மானமில்லாத அதிமுக- முதல்வர் ஸ்டாலின் சாடல்!

5 months ago 4
ARTICLE AD

நீட் தேர்வின் வினாத் தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் குளறுபடிகளும் முறைகேடுகளும் நிறைந்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் சாடி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:

’’தரம், தரம் என்றார்கள்!

நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.

நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்!

RSS - BJP மாநாடுகளில் showpiece ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!’’ என்று முதல்வர் ஸ்டாலின் சாடி உள்ளார்.

முன்னதாக பத்திரிகையாளர் அரவிந்த் குணசேகர் வெளியிட்டு இருந்த எக்ஸ் பதிவில், ’’மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் என்றும் என்டிஏ (தேசியத் தேர்வுகள் முகமை) அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இவர்கள் இளங்கலை நீட் தேர்வு மதிப்பெண்களில் முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது’’ என்று பதிவிட்டு இருந்தார்.

இதைக் குறிப்பிட்டு, நீட் தேர்வை முதல்வர் ஸ்டாலின் சாடி உள்ளார்.

Read Entire Article