ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா டென்னிஸ் ஜாம்பாவனான ரோஜர் பெடரருடன் தனது சந்திப்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்

நீரஜ் சோப்ரா:

இந்தியாவிக் அதிகம் பின்தொடரும் விளையாட்டு வீரர்களில் ஒருவரான நீரஜ் சோப்ராவுக்கு இந்தியாவில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் 2020-ல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று அசத்தியிருந்தார். அதன் பிறகு 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மேலும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற முதல் ஆசியர் என்ற பெருமையையும் பெற்றார்.

மேலும் 2020-ல் இருந்து அவர் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் தங்கம் வென்றும், 24 முறை முதல் மூன்று இடங்களில் எதாவது ஒரு இடத்தை பிடித்து அசத்தியிருந்தார்.

இதையும் படிங்க: Justin Trudeau : கட்சிக்குள் கிளம்பிய எதிர்ப்பு.. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா.. பிண்ணனி என்ன?

முடியை பராமரிப்பது கடினம்:

இந்த நிலையில் தனது முடி குறித்தும் ரோஜ்ர் ஃபெடரர் குறித்து தனது உரையாடல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நீரஜ் சோப்ரா, “நான் என் தலைமுடியை கவனிக்கவில்லை, இப்போது அது மெதுவாக மறைந்து வருகிறது. அதைக் கவனிப்பது மற்றும் பராமரிப்பது கடினம். மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், எந்த விளையாட்டு வீரரைப் பார்த்தாலும், அவர்கள் டென்னிஸ் வீரர்கள் ரஃபேல் நடால் அல்லது ஃபெடரரைப் போல நீண்ட முடியை வைத்திருப்பார்கள். யார் அதை வைத்தாலும், அவர்களுக்கு வியர்வை அதிகமாக இருக்கும், ஆனால் பெண்களுக்கு ஷாம்பு மற்றும் எண்ணெய் அதிகம் பயன்படுத்தி தங்கள் முடியை பாரமரித்து இருப்பார்கள், அவர்களுக்கு எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. என்னால் அது முடியாது. பயிற்சிக்குப் பிறகு நான் என் வியர்வை முடியை டவலால் உலர்த்திவிட்டு குளித்துவிட்டு தூங்குவேன். இப்போது என் தலைமுடி வலுவிழந்து விட்டது,” என்றார்.

இதையும் படிங்க: Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்

ரோஜர் ஃபெடரர் சந்திப்பு:

மேலும் ரோஜர் ஃபெடரர் சந்திப்பு குறித்து அவர் பேசியதாவது “நான் பெடரரை சூரிச்சில் சந்தித்தேன். அவர் சுவிஸ் சுற்றுலாத் தூதுவர், இந்தியாவின் தரப்பிலிருந்து எனக்கும் அதே பங்கு உண்டு. அதன் மூலம் அவரைச் சந்திக்க நேர்ந்தது. எங்கள் உரையாடல் சாதாரணமாக நடந்தது, அது விளையாட்டு மற்றும் ஆஃப் கேமராவைப் பற்றியது. அவர் மிகவும் உண்மையானவர், அவர் எப்படிப்பட்ட விளையாட்டு வீரர் என்பது அனைவருக்கும் தெரியும், ”என்று அவர் கூறினார்.

இந்தியா மீதான பெடரரின் அன்பை குறித்து பேசிய நீரஜ் சோப்ரா, “இந்திய உணவு எப்போதும் தனது முதல் ஐந்து இடங்களில் இருப்பதாக அவர் ஃபெடரர். அவர் எங்கு சென்றாலும், இந்திய உணவை ஆர்டர் செய்ய முயற்சிப்பதாக ஃபெடரர் கூறியதாக நீரஜ் சோப்ரா கூறினார்.