Nayanthara Bday Docuementry: திருமணமான இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

நயன்தாராவின் 40வது பிறந்தநாள்:

கேரளாவில் பிறந்து தமிழ்மொழி வாயிலாக திரையுலகிற்கு அறிமுகமாகி, தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து நாடு முழுவதும் பிரபலமாக இருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்றும் இவர் அழைக்கப்படுகிறார். பக்கத்துவீட்டு பெண் தொடங்கி, அதிரடியான காவல்துறை அதிகாரி வரை, பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கான பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார். இந்நிலையில், நயன்தாரா இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர். அதோடு, பிறந்தநாளையொட்டி நயன்தாராவின் திருமண ஆவணப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.

நயன்தாரா - Beyond The Fairy Tale

நயன்தாரா - Beyond The Fairy Tale என்ற தலைப்பில் அவரது திருமண ஆவணப்படம் வெளியாகியுள்ளது. இதில், நயன்தாராவின் காதல் வாழ்க்கை, தனிப்பட்ட நிகழ்வுகள், அன்பு நிறைந்த திருமண தருணங்கள் மற்றும் விக்னேஷ் சிவனுடனான அவரது வாழ்க்கையைப் பற்றி விரிவாக காட்டப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜுன் மாதம், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் நடைபெற்றது. அதைதொடர்ந்து, அதே ஆண்டில் செப்டம்பர் மாதம் இவர்களது திருமணம் தொடர்பான டீசரை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இது பெரும் எதிர்பார்ப்புகளை தூண்டியது.

2 ஆண்டுகள் தாமதம்:

நெட்ஃப்ளிக்ஸ் பெருமிதம்:

இந்த ஆவணப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர்கள் பேசுகையில் “நயன்தாரா - பியாண்ட் தி ஃபேரிடேல் படத்தின் நோக்கம், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோரின் ஆன்மாக்கள் ஒருவரையொருவர் எப்படிக் கண்டுபிடித்தன, அவர்கள் எப்படி ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள், ஆதரிக்கிறார்கள், எப்படித் தயாராகிறார்கள் என்று பார்வையாளர்களை ஒரு பயணத்தில் அழைத்துச் செல்வதுதான். அவர்களின் வாழ்வின் அடுத்த படி. இது ஒரு திருமணத்தின் கதையை விட மிக அதிகம் - இது இரண்டு அழகான நபர்கள் ஒன்றாக வாழ்க்கையை உருவாக்குவதற்கான ஒரு சிறப்புக் கதை, மேலும் இந்த கதையை ரசிகர்கள் ஒரு கண்ணோட்டத்தை எடுப்பதற்காக நாங்கள் காத்திருக்க முடியாது" என தெரிவித்துள்ளனர்.