மக்களவைத் தேர்தல் 2024:

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அதில் முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது. அதனைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜூன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, நாகப்பட்டினத்தில் வெற்றி பெறப்போவது யார் என்பது அந்த தொகுதி வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மக்களவை தொகுதி:

தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 29வது தொகுதியாக உள்ளது. ஆரம்ப காலத்தில் இந்த தொகுதி இரண்டு உறுப்பினர் கொண்ட தொகுதியாக இருந்த நிலையில், ஒரு உறுப்பினர் கொண்ட தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது. அதாவது தனித்தொகுதி. இதையடுத்து, இங்கு பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குயினத்தவர் மட்டுமே போட்டியிட முடியும்.

நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் நாகப்பட்டினம், திருவாரூர் (தனி), நன்னிலம் (தனி), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. பின்னர் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி, தஞ்சாவூர் மக்களவை தொகுதியுடன் இணைக்கப்பட்டது. அதன்பின், கீழ்சேளூர் சட்டமன்ற தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு, நாகப்பட்டினம் தொகுதியுடன் இணைக்கப்பட்டது.

இதுவரை நாகப்பட்டினத்தில் வெற்றிபெற்றது எந்த கட்சிகள்..?

நாகப்பட்டினம் மக்களவை தொகுதியில் இதுவரை அதிகபட்சமாக இந்திய கம்யூனிஸ்ட் 7 முறையும், காங்கிரஸ் 5 முறையும், திமுக 4 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த மக்களவை தேர்தலில் யார் வெற்றிபெற்றார்கள்..?

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற 17வது மக்களவை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ம. செல்வராசு, அதிமுக வேட்பாளரான, சரவணனை 2,09,349 வாக்குகள் வேறுபாட்டில் வென்று எம்.பியாக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த முறை யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்..?

கடந்த 2019 மக்களவை தேர்தலை போன்று இந்த தேர்தலிலும் கம்யூனிஸ்ட் கட்சியே வெற்றிபெறும் என்று கருதப்படுகிறது.

கட்சி

வேட்பாளர்

சிபிஐ

செல்வராசு

அதிமுக

சுர்ஜித் சங்கர்

பாஜக

ரமேஷ்

நாம் தமிழர் கட்சி

மு.கார்த்திகா

வாக்காளர்கள் விவரம்:

நாகப்பட்டினத்தில் மொத்தமாக 13,38,459 வேட்பாளர்கள் உள்ளனர். அதில், ஆண்கள் - 6,54,850, பெண்கள் - 6,83,528, மூன்றாம் பாலினத்தவர்கள் - 81 பேர்கள் உள்ளனர். அதில் மக்களவை தேர்தலில் வாக்களித்தவர்கள் 9,67,694 பேர் மட்டுமே ஆகும். அதில், ஆண்கள் - 4,63,917, பெண்கள் - 5,03,752, மூன்றாம் பாலினத்தவர்கள் - 25 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதன்மூலம், 71.94% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.