தோசை பிரியர்களா? இதோ உங்களுக்காக காளான் மசாலா தோசை எப்படி செய்வது எளிதான செய்முறை காணலாம்.

காளான் மசாலா தோசை

என்னென்ன தேவை?

தோசை மாவு - தேவையான அளவு

காளான் - 2 கப்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

வெங்காயம் - 2

தக்காளி - 2

மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்

சீரக தூள் - ஒரு டீஸ்பூன்

கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - ஒரு டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

நெய் - தேவையான அளவு

சீஸ் - தேவையான அளவு

முதலில் தோசைக்கு தேவையான மசாலாவை தயார் செய்து வைக்கலாம். வெங்காயம் தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். இப்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கூடானதும், அதில் சீரகம்,பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதன் பிறகு, தக்காளி சேர்த்து நன்றாக வதங்கியதும் உப்பு, மிள்காய் தூள், அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இதற்கு ஃப்ர்ஷ் க்ரீன்,சீஸ் கூட தேவையெனில் சேர்க்கலாம். ருசி நன்றாக இருக்கும். விருப்பம் இருப்பவர்கள் இரண்டு உருளைக்கிழங்கை வேகவைத்து சேர்க்கலாம். 5 நிமிடங்கள் கொதித்ததும் அதில் நறுகிய காளான் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இது நன்றாக கொதித்ததும் காளான் மசாலா தயார்.

காளான் மசாலா தோசை தயாரிக்க..

தோசை கல்லில் தோசை ஊற்றி, அதன் மேல் காளான் மசாலா வைத்து தோசை பொன்னிறமாக வேக விடவும். சுவையான காளான் மசாலா தோசை தயார். நெய் சேர்த்து தோசை தயாரிப்பது நல்லது.

கொத்தமல்லி சட்னி

உளுந்து, பச்சை மிளகாய், சிறிதளவு சீரம், ஒரி கைப்பிடி அளவு கொத்தமல்லி எல்லாவற்றையும் நன்றாக வதக்க வேண்டும். அது ஆறியதும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் கொத்தமல்லி சட்னி தயார். மிக்ஸியில் வெகு நேரம் அரைக்க கூடாது. அப்படி செய்தால் சட்னியில் கசப்புத்தன்மை ஏற்படும்.

தேங்காய் சட்னி

தேங்காய், பொட்டுக்கடலை, பச்சைமிளகாய் உப்பு, வைத்து மிக்ஸியில் அரைத்து, கடுகு,உளுந்து, கருவேப்பிலை தாளித்தால் தேங்காய் சட்னி தயார்.

பாலக் பனீர் ஊத்தாப்பம்

தேவையான பொருட்கள்

பாலக்கீரை - ஒரு கப்

ரவா - ஒரு கப்

தயிர் - ஒரு கப்

பனீர் துருவியது - ஒரு கப்

வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒரு கப்

தக்காளி பொடியாக நறுக்கியது - ஒரு கப்

பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - ஒரு கப்

கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ரவா, தயிர், உப்பு, அரைத்த பாலக்கீரை எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கவும். ஒரு 20 நிமிடங்கள் ஊறட்டும். இதில் மாதுளை போன்ற பழங்களை விருப்பப்பட்டால் சேர்த்து கொள்ளலாம். தோசை ஃபில்லிங்கிற்கு ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, துருவிய பனீர் அனைத்தையும் நன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.

பின்னர், தோசை கல்லில் மாவை ஊத்தி தோசை வார்க்க வேண்டும். அதன்மீது பழ கலவை, துருவிய பனீர் ஆகிவயவற்றை சேர்த்து நன்கு வேக விடவும். அவ்ளோதான். சுவையான பாலக்கீரை பனீர் ஊத்தாப்பம் ரெடி.