Muruga Bakthar Manadu ; மதுரையில் போக்குவரத்து மாற்றம்.. எந்த வழியாக செல்ல வேண்டும் தெரியுமா?

5 months ago 5
ARTICLE AD

மதுரை பாண்டிக்கோவில் அருகே நாளை நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்து மதுரை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவு.

முருக பக்தர்கள் மாநாடு

மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள மைதான திடலில் நாளை ஜூன் 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அப்பகுதியில் முருகனின் அறுபடை வீடுகள் அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான முருக பக்தர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநாடு ஏற்பாடுகள் அதி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முருக பக்தர்கள் மாநாட்டிற்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்து மதுரை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்து மாற்றம்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் மீனாட்சி மிஷன் மருத்துவமனை, பாண்டிக்கோவில் சுற்றுச்சாலை, கருப்பாயூரணி, சிலைமான், விரகனூர் சுற்றுச்சாலை வழியாக வழக்கமான பாதையில் செல்ல வேண்டும். ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசியில் இருந்து மதுரை வரும் பேருந்துகள் விரகனூர் சந்திப்பில் இருந்து தென்கரை சாலை, அரவிந்த் கண் மருத்துவமனை, அண்ணா நகர் வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும்.

மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி

மேலூரில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் பூவந்தி, திருப்புவனம் வழியாக விரகனூர் சுற்றுச்சாலை சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் சரக்கு வாகனங்கள் திருமங்கலம், கப்பலூர், சமயநல்லூர், வாடிப்பட்டி வழியாக செல்ல வேண்டும். மதுரை பாண்டிகோவில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை பொது மக்களின் கார், இரு சக்கர வாகன போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. மதுரை பாண்டிகோவில் சந்திப்பு முதல் விரகனூர் சந்திப்பு வரை மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என காவல் ஆணையாளர் லோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.

Read Entire Article