mulla periyar dam: கேரள எம்.பி.க்கள், யூ- ட்யூபர்கள் கண்டித்து தேனியில் விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்.

1 year ago 7
ARTICLE AD

தமிழக கேரள எல்லையை இணைக்கும் ஒரு முக்கிய மாவட்டமாக பார்க்கப்படுவது தேனி மாவட்டம். தேனி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விளங்குவது விவசாயம். இப்பகுதியில் நெல், தென்னை, திராட்சை, வாழை உள்ளிட்ட பயிர்களின் விவசாயம் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் காய்கறிகளின் உற்பத்தியும் அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் விவசாயத்திற்கு உயிர்நாடியாக விளங்குகிறது முல்லைப் பெரியாறு அணை.

குறிப்பாக தென்தமிழகத்தின் நீராதாரமாகத் திகழும் முல்லைப்பெரியாறு அணை கட்டப்பட்டு நூற்றாண்டுகளை கடந்ததால் பலவீனமாகி விட்டதாக கூறி கேரள மாநிலத்தில் தொடர் விஷம கருத்துக்கள் பரவி வருகிறது. அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் வயநாட்டில் உண்டான நிலச்சரிவை காரணம் காட்டி தற்போது முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் விஷம கருத்துக்கள் மேலும் பரவி வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் அம்மாநில எம்.பி.க்கள் பேசி வருகின்றனர்.

‘கலைஞர் எனும் தாய்’ நூலை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.. பெற்று கொண்ட நடிகர் ரஜினிகாந்த்!

மேலும் கேரளாவில் உள்ள தன்னார்வ அமைப்பினர் மற்றும் யூடியூபர்ஸ் உள்ளிட்டோர் முல்லைப்பெரியாறு அணை குறித்து  அவதூறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர். தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணை குறித்து அவதூறு பரப்பி வரும் கேரள மாநிலத்திவரின் செயலால் தமிழக விவசாயிகள் கொந்தளிப்பில் உள்ளனர்.

Pension Scheme: அரசு ஊழியர்களே! 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்!

இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக விஷம கருத்துக்கள் பரப்பி வரும் கேரள மாநில எம்.பிக்கள் மற்றும் தன்னார்வலர்கள் யூ-ட்யூபர்ஸ் உள்ளிட்டோரை கண்டித்து இன்று தேனி மாவட்டத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

உத்தமபாளையம் புறவழிச்சாலையில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை எதிரே நடக்கும் இந்த உண்ணாவிரதத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றுள்ளனர். முன்னதாக பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள பென்னி குயிக் சிலைக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விவசாயிகள், உண்ணாவிரத திடலில், முல்லைப்பெரியாறு அணை குறித்து அவதூறு பரப்பி வரும் கேரள மாநிலத்தவரை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Breaking News LIVE: ஹிஸ்புல்லா திடீர் தாக்குதல்! இஸ்ரேலில் அடுத்த 2 நாட்களுக்கு ராணுவ அவசர நிலை

தொடர்ந்து முல்லைப்பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துக்களை பரப்பி வந்தால் தமிழகத்தில் உள்ள கேரள  எல்லைகளை அடைத்து அம்மாநிலத்திற்கு பொருளாதார நெருக்கடி கொடுக்கப் போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Read Entire Article