பிரதமர் மோடி தலைமையில் பொறுப்பேற்ற 30 கேபினட் அமைச்சர்கள்! யாருக்கெல்லாம் இடம்? முழு லிஸ்ட் இதோ

மோடி இன்று பிரதமராக குடியரசுத் தலைவர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து கொண்டார். இதையடுத்து கேபினட் அமைச்சர்களாக பொறுப்பேற்பவர்களும் குடியரசுத் தலைவர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து கொண்டனர்.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று பதவியேற்றுள்ளது. டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். மேலும் படிக்க..

மத்திய அமைச்சரவையில் இவர்தான் டாப் பணக்காரர்! யார் இந்த TDP கட்சியைச் சேர்ந்த பெம்மாசானி!

மக்களவையின் பணக்கார உறுப்பினரான தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரசேகர் பெம்மசானி பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். யார் இந்த சந்திரசேகர் பெம்மசானி, இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து பார்ப்போம்.

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் ஆட்சி அமைத்தது. பிரதமராக 3வது முறையாக மோடி பதவியேற்ற நிலையில், அமைச்சர்களும் பதவியேற்றனர். கடந்த முறை பாஜக கட்சியினர் பெரும்பாலானோர் அமைச்சராக பதவியேற்ற நிலையில், மேலும் படிக்க..

சிவராஜ் சிங் சவுகான் முதல் மனோகர் லால் கட்டார் வரை.. மத்திய அமைச்சரவையில் 7 முன்னாள் முதலமைச்சர்கள்!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மோடியின் புதிய அரசு இன்று பதவியேற்றுள்ளது. டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றார். அவருடன் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்று கொண்டனர். இவர்களுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். பாஜகவை சேர்ந்தவர்கள் மட்டும் இன்றி கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களும் மத்திய அமைச்சர்களாக இன்று பொறுப்பேற்று கொண்டனர். மேலும் படிக்க..

செங்கல்பட்டு மாவட்டத்தில் 4.31 கோடி பெண்கள் பயன்..! ஆச்சரியம் அளிக்கும் டேட்டா..!

மகளிர்க்கு இலவச பேருந்து புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களில் மிக முக்கிய திட்டங்களில் ஒன்றாக மகளிர் இலவச பேருந்து, திட்டம் பார்க்கப்படுகிறது.அவ்வப்பொழுது தமிழ்நாடு முதலமைச்சரும் இந்த திட்டம் குறித்து மேடைகளில் பேசி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் மூலம் பெரும்பாலும் வேலைக்கு செல்லும் பெண்கள் பயனடைவதாகவும், அவர்களுடைய மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை, பாதுகாக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. மேலும் படிக்க..

இது நடக்காமல் இருந்திருந்தால் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் யுத்தம் இல்லை.. காரணம் இங்கிலாந்தா..?

2024 டி20 உலகக் கோப்பையில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன்மூலம், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும் படிக்க..