ஆர்பிஐ அறிமுகப்படுத்திய பிரவாஹ் போர்டல் : என்னவெல்லாம் செய்ய முடியும் தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநரான ஸ்ரீ சக்திகாந்த தாஸ், பிரவாஹ் போர்ட்டல், சில்லறை நேரடி மொபைல் செயலி மற்றும் ஃபின்டெக் களஞ்சியத்தை நேற்று தொடங்கி வைத்தார். இந்த மூன்று முயற்சிகளும் முறையே ஏப்ரல் 2023 , ஏப்ரல் 2024 மற்றும் டிசம்பர் 2023 இல் ரிசர்வ் வங்கியின் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைக் கொள்கைகள் குறித்த இருமாத அறிக்கையின் ஒரு பகுதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. PRAVAAH போர்ட்டல் எந்தவொரு தனிநபருக்கும் அல்லது நிறுவனத்திற்கும் பல்வேறு ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு தடையற்ற முறையில் ஆன்லைனில் விண்ணப்பிக்க மேலும் படிக்க..

தனியறையில் இருந்தேன்.. குஜராத் கலவரத்திற்கு பின் முதல் தேர்தல் தருணங்களை பகிர்ந்த மோடி

பிரதமர் நரேந்திர மோடி ABP நெட்வொர்க்கின் ஒரு அங்கமான ABP அனந்தாவுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் குஜராத் கலவரத்திற்கு பிறகு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் குறித்து பகிர்ந்து கொண்ட பகுதியை இங்கு காணலாம். டிசம்பர் 15, 2002 அன்று நடந்த குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, குஜராத் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உள்ள தனது அறையில் அமர்ந்திருந்ததாகக் கூறினார். உலக அரசியலில் மிகவும் சக்தி வாய்ந்த ஆளுமைகளில் ஒருவராக மோடியின் எழுச்சியை வடிவமைத்த வரலாற்றுச் மேலும் படிக்க..

அப்பாவி மக்களைக் கொன்று குவித்த இஸ்ரேல்! கொதித்தெழுந்த திரைப்பிரபலங்கள்!

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் இடையிலான போர் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகின்றது. இந்த போர் குறித்த திடுக்கிடும் தகவல்களும் மனதை உலுக்கும் காட்சிகளும் தொடர்ந்து வெளியாகி வந்தன. இந்த போர்க்கு சில நாடுகள் நேரடியாகவும் சில நாடுகள் மறைமுகமாகவும் தங்களது ஆதரவுகளை இரு தரப்பினருக்கும் அளித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது மே மாதம் 26ஆம் தேதி ரஃபாவில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஏராளமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் படிக்க..

பிரதமரிடம் சரமாரி கேள்வி! காஷ்மீரில் இணைய முடக்கம் ஏன்? புலனாய்வை தவறாக பயன்படுத்துகிறீர்களா? மோடியின் பதில்

பிரதமர் நரேந்திர மோடி ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு பேட்டியளித்தார். அதில் சட்டப்பிரிவு 370 நீக்கத்தின் போது ஏன் இணைய முடக்கம் செய்யப்பட்டது என்றும் மேற்கு வங்கத்தில் ஓபிசி சான்றிதழ் நீக்கப்பட்டது குறித்தும், புலனாய்வு பிரிவை தவறாக பயன்படுத்துகிறீர்களா? என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. பிரதமர் மோடி தெரிவித்ததாவது, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு அரசாங்கத்தை நடத்த சில உத்திகளை செயல்படுத்த காஷ்மீரில் இணையத்தை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது, கடந்த ஐந்து ஆண்டுகளாக இணையம் நிறுத்தப்படவில்லை, மேலும் படிக்க..

விவேகானந்தர் பாறையில் இரவு பகலாக தியானம்! பிரதமர் மோடி ப்ளான்!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு நாளை மறுநாள் அதாவது மே 30ஆம் தேதி கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி அன்று பிற்பகல் படகு மூலம் விவேகானந்தர் நினைவு பாறைக்கு சென்று தியான மண்டபத்தில் தியானம் செய்யவுள்ளார். மேலும், ஜூன் மாதம் 1ம் தேதி தியானத்தை முடித்துவிட்டு விவேகானந்தர் நினைவுப் பாறை விட்டு வெளியே வந்து, பின்னர் டெல்லி புறப்பட்டுச் செல்லவுள்ளார். மேலும் படிக்க..