<p>மலையாள திரையுலகில் நடிகர்கள் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாக மோகன்லாம் கருத்து தெரிவித்துள்ளார். </p>
<p>மலையாள திரையுலகில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் விவரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது. அது வெளியான பின் பல நடிகைகள் தங்களுக்கும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தெரிவித்து வருகின்றனர். </p>
<p>இது தொடர்பாக மலையாள நடிகர் மோகன்லால் திருவனந்தபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில்,”நான் இங்கேதான் இருக்கிறேன். எங்கேயும் ஓடி ஒளியவில்லை. மலையாள திரையுலகம் இந்த அறிக்கையால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். நான் அம்மா சங்கத்தின் தலைவராக இரண்டு முறை இருந்துள்ளேன். குழு கலைக்கப்பட்டாலும் அம்மா சங்கத்தின் செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் இல்லை. அம்மா சங்கம் மீது அவதூறு பரப்புவது சரியாக இருக்காது. இந்த விவரகாரத்தில் அரசு தேவையான நடவடிக்கை எடுக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.</p>
<hr />
<p> </p>