Mohammed Shami: சானியா மிர்சாவுடன் திருமணமா? மெளனம் கலைத்த முகமது ஷமி!

1 year ago 9
ARTICLE AD

அண்மையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மற்றும் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. முன்னதாக பாகிஸ்தான் அணி வீரர் சோயப் மாலிக்கை சானிய மிர்சா விவாகரத்து செய்து இருந்தார். அதேபோல் முகமது ஷமியும் அவரது மனைவியை விவாகரத்து செய்து வாழ்ந்து வந்தார். இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று சமூக வலைதளங்களில் கூறப்பட்டது.

ஆதரமற்ற செய்திகளை பரப்ப வேண்டாம்:

இந்நிலையில் இது தொடர்பான கேள்விக்கு அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் முகமது ஷமி பதில் அளித்துள்ளார். அதில்,"சமூக ஊடகங்களில் பொறுப்புடன் நடந்து கொள்ளவும். இது போன்ற ஆதாரமற்ற செய்திகளை பரப்புவதை தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

வேண்டுமென்றே செய்கின்றனர்:

இது வித்தியாசமானது. சிலர் வேடிக்கைக்காக வேண்டுமென்றே இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர். எனவே நான் என்ன செய்ய முடியும்? கைபேசிய திறந்தால் இது போன்ற மீம்ஸ்களை தான் பார்க்க முடிகிறது. எனவே அந்த மீம்ஸ்கள் வேடிக்கையாக உருவாக்கப்பட்டவை என்று மட்டுமே நான் கூற விரும்புகிறேன். ஆனால் அது ஒருவரின் வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருப்பதால் நீங்கள் அதைப் பற்றி சிந்தித்து பகிர வேண்டும்.

அந்த நபர்கள் இது போன்ற செய்திகளை அதிகாரப்பூர்வமற்ற பக்கங்களில் வெளியிட்டு தப்பிக்கிறார்கள். ஆனால் உண்மையாக உங்களுக்கு தைரியம் இருந்தால் அதிகாரப்பூர்வ பக்கத்தில் அதை சொல்லுங்கள். நான் பதிலளிக்கிறேன். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு வெற்றியடைய முயற்சி செய்யுங்கள். மக்களுக்கு உதவுங்கள். உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்று நான் நம்புகிறேன்" என்று கூறியுள்ளார் முகமது ஷமி.

மேலும் படிக்க: Elavenil Valarivan: பாரீஸ் ஒலிம்பிக் 2024.. துப்பாக்கி சுடுதல்! தங்கம் வெல்ல காத்திருக்கும் இளவேனில் வாலறிவன்! யார் இவர்?

மேலும் படிக்க: Prithviraj Tondaiman: துப்பாக்கி சுடுதல்.. தங்கம் வெல்ல காத்திருக்கும் தங்கமகன் பிருத்விராஜ் தொண்டைமான்! யார் இவர்?

Read Entire Article