MK Stalin: மதுரை, கோவை மெட்ரோ.. உங்களை சந்திக்க ரெடி.. பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

3 weeks ago 3
ARTICLE AD
<p>மதுரை மற்றும் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்ட விவகாரம் குறித்து எப்போது வேண்டுமானாலும் பிரதமரை சந்திக்க தான் தயாராக உள்ளதாக <a title="முதலமைச்சர் ஸ்டாலின்" href="https://tamil.abplive.com/topic/cm-mk-stalin" data-type="interlinkingkeywords">முதலமைச்சர் ஸ்டாலின்</a> தெரிவித்துள்ளார்.&nbsp;</p> <p>இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், &ldquo;தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். நான் ஒவ்வொரு குறிப்பாணையிலும், உங்களுடனான எனது சந்திப்பிலும் கோவை மற்றும் மதுரைக்கான&nbsp; மெட்ரோ ரயில் சேவையை பலமுறை கோரியுள்ளேன். நமது நாட்டின் வளர்ச்சிக்கு வலுவான பங்களிப்பாளர்களில் ஒருவராக, இந்த திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதால் தமிழக மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர். இவை நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கான முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்கள்.</p> <p>மேலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி. அதற்கு பங்களிப்பதில் சரியான நோக்கம் மற்றும் நியாயமான நடவடிக்கையை நாங்கள் எதிர்நோக்குகிறோம். அவற்றின் முக்கியத்துவத்தை விளக்க எனது குழுவுடன் உங்களைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சியையே இந்தியாவின் வளர்ச்சி! அதற்குத் துணை நிற்கவுள்ள மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டத்துக்கு அனுமதி வழங்க மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாகத் தலையிட வேண்டும். அதற்காக அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன்&rdquo; என அவர் கூறியுள்ளார்.&nbsp;</p>
Read Entire Article