2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுகவினர் அளிக்கும் ஒத்துழைப்பில் சுணக்கம் ஏற்பட்டால் உடனடியாக வார் ரூமுக்கு தகவல் தெரிவிக்குமாறு கூட்டணி கட்சியினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வரும் ஏப்ரல் 23ம் தேதி 2026ம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தேமுதிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முக்குலத்தோர் புலிப்படை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி அளிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்து விட்டு தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. இந்த நிலையில் சென்னை திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகள் இடையேயான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து கூட்டணி கட்சியின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலில் மாபெரும் கூட்டணி அமைத்து திமுக போட்டியிடுகிறது. அந்த கூட்டணி கட்சியின் தலைவர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டணி கட்சி தலைவர் என்ற முறையில் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

நாங்கள் எண்ணிக்கையால் அமைந்த கூட்டணி அல்ல; மதச்சார்பின்மை போற்றி - மாநில உரிமை காக்கும் எண்ணத்தால் இணைந்த கூட்டணி!

தமிழ்நாடு இதுவரை காணாத மாபெரும் வெற்றி பெறப் போகும் நம் “மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி” கட்சித் தலைவர்கள் சொல்கிறோம்…

“#வெல்வோம்_ஒன்றாக!” pic.twitter.com/k48drlZqDn

— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 30, 2026

நடைபெறும் இந்த சட்டமன்ற தேர்தலையொட்டி நாம் அமைத்திருக்கும் இந்த கூட்டணி புதிய கூட்டணி கிடையாது. தொடர்ந்து 2 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல் என தொடர்ந்து மாபெரும் கூட்டணி அமைத்து வருகிறோம். இந்திய அளவில் இல்லாத வகையில் இவ்வளவு ஆண்டுகாலம் தொடர்ந்து இந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைந்துள்ளது.

இந்த கூட்டணி 2026 சட்டமன்ற தேர்தலிலும் தொடர்கிறது. இந்த தேர்தலில் நாம் எப்படி களம் காண இருக்கிறோம், குறிப்பாக தொகுதி பங்கீடு, தொகுதிகள் ஒதுக்கீடு ஆகியவை முடிந்துள்ளது. ஏற்கனவே இருந்த கட்சிகளை விட இன்னும் சில கட்சிகள் இந்த கூட்டணியில் அமைந்துள்ளது.

நம்முடைய கூட்டணிக்கட்சியினர் களம் காணும் தொகுதிகளில் வெற்றி பெறாவிட்டால் உங்கள் பதவி இருக்காது என மாவட்டச் செயலாளர்களை எச்சரித்துள்ளேன். எங்கேனும் சுணக்கம் இருந்தால் அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வார் ரூமுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை இருக்கும்” என தெரிவித்துள்ளார்.