Minister Jegadeshwari: மீடியா டூ மினிஸ்டர்.. ராஜபாளையம் அமைச்சர் ஜெகதீஸ்வரி பின்னணி தெரியுமா?

2 weeks ago 4
ARTICLE AD

தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் ராஜபாளையம் தொகுதியில் இருந்து தவெக எம்.எல்.ஏ. ஜெகதீஸ்வரிக்கு அமைச்சராக இடம் கிடைத்துள்ளது. அவரின் பின்னணி பற்றிப் பார்க்கலாம்.

தமிழ்நாடு புதிய அமைச்சரவை

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து மே 10ம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அவருடன் சேர்ந்து ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன், சிடிஆர் நிர்மல்குமார், வெங்கட ரமணன், அருண்ராஜ், டி.கே.பிரபு, ராஜ்மோகன், கீர்த்தனா ஆகிய 9 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

#RajivGandhi
இராஜபாளையம் தொகுதி எம்எல்ஏ ஜெகதீஸ்வரி அவர்கள் இன்று அமைச்சராக பதவி ஏற்றார்

இராஜபாளையம் தொகுதியில் 1952ல் மாண்புமிகு PS.குமாரசாமிராஜா சென்னை மாகாண பிரதமராக நல்லாட்சி தொடர்ந்தார் அதன்பிறகு 75ஆண்டுகளுக்கு பிறகு K.ஜெகதீஸ்வரி அமைச்சராக வருவதற்கு நம் நகருக்கு பெருமையே pic.twitter.com/PLwgrA1esC
— TVK Rajapalayam Murugesan (@TVKRJPM) May 21, 2026

இந்த நிலையில் கூட்டணி அமைச்சரவை என்பதில் உறுதியாக இருந்த விஜய் இதுதொடர்பாக தனக்கு ஆதரவு கொடுத்த கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் காங்கிரஸூக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டது. விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும் அமைச்சரவையில் விரைவில் இடம் ஒதுக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இதனிடையே இன்று தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதன்படி 21 தமிழக வெற்றிக் கழக அமைச்சர்களும், 2 காங்கிரஸ் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களில் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து 3 பெண் அமைச்சர்களும் அடங்குவர். இதில் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., ஜெகதீஸ்வரியும் ஒருவர். இவருக்கு விஜய் தலைமையிலான அரசில் சமூக நலத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜெகதீஸ்வரி பின்னணி

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகாவைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி. இவர் இளநிலை பட்டப்படிப்பு படித்துள்ளார். திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ள ஜெகதீஸ்வரிக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் 40 வயதாகும் ஜெகதீஸ்வரி ஊடகம் ஒன்றில் பணியாற்றி வருவதாக தனது வேட்புமனு தொடர்பான விவரங்களில் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் களம் கண்ட ஜெகதீஸ்வரி சுமார் 10,605 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தங்கபாண்டியனை வீழ்த்தியிருந்தார். இந்த நிலையில் தான் அவருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல்களில் திமுக, அதிமுக கோட்டையாக இருந்த ராஜபாளையம் தொகுதி இம்முறை தமிழக வெற்றிக் கழகம் வசம் சேர்ந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அமைச்சராக சிவகாசி எம்.எல்.ஏ. கீர்த்தனா தேர்வு செய்யப்பட்ட நிலையில், தற்போது ராஜபாளையமும் அமைச்சர் தொகுதியாக மாறியுள்ளதால் தென்மாவட்டங்கள் கொஞ்சம் அதிக கவனம் ஈர்த்துள்ளது.

Read Entire Article