இந்தியாவின் சாதனையை முறியடித்த ஸ்பெயின்:

இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் தான் சர்வதேச கிரிக்கெட்டில் டி20தரவரிசையை பொறுத்தவரை டாப் 5 இடங்களில் இருக்கும் அணிகள். இப்படி டாப் 5 மட்டும் இன்றி டாப் 10 அணிகள் கூட செய்ய முடியாத சாதனையைத்தான் கத்துக்குட்டி அணியான ஸ்பெயின் செய்துள்ளது.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை துணை பிராந்திய ஐரோப்பா தகுதிச் சுற்று நடைபெற்று வருகிறது. இதில், குரூப் சி-யில் கிரீஸை வென்றதன் மூலம் ஸ்பெயின் தொடர்ந்து 14 டி20ஐ வெற்றிகளை நிறைவு செய்திருக்கிறது. அந்தவகையில் ஸ்பெயின் அணி தற்போது ஐரோப்பா தகுதிச் சுற்றில் நான்கு ஆட்டங்களில் மூன்று வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதேபோல், குரூப் சி-யில் முதலிடத்தில் உள்ளது.

இந்த தொடர் வெற்றியின் மூலம் 2021 மற்றும் 2022 அடிப்படையில் தொடர் வெற்றிகளை பெற்றுவந்த பெர்முடா மற்றும் மலேசியாவின் சாதனையை ஸ்பெயின் முறியடித்திருக்கிறது. அதாவது பெர்முடா அணி 13 தொடர் வெற்றிகளையும், மலேசிய அணி 13 தொடர் வெற்றிகளையும் பெற்றிருந்தது. அதோடு இந்தியாவின் சாதனையையும் ஸ்பெயின் அணியின் 14 வெற்றிகள் மூலம் முறியடிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை 12 தொடர் வெற்றிகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. மகளிர் டி20 போட்டிகளில் 2018 முதல் 2019 வரை தொடர்ந்து 17 ஆட்டங்களில் வெற்றி பெற்ற தாய்லாந்து அணி முதல் இடத்தில் இருக்கிறது.

ஆண்களுக்கான டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள்

அணிகள்

வெற்றி

ஸ்பெயின்

14*

மலேசியா

13

பெர்முடா

13

ஆப்கானிஸ்தான்

12

இந்தியா

12

ருமேனியா

12