Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மின் தடை: நாளை 18.11.2025! உங்க ஏரியா இருக்கா? மின்வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!

3 weeks ago 3
ARTICLE AD

Mayiladuthurai Power Shutdown: மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (18.11.2025) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணி

தமிழ்நாட்டில் மின்வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, மாதத்தில் ஒருநாள் மின்தடை செய்யப்படுவது வாடிக்கை. மயிலாடுதுறை மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை செய்யப்பட்டு வருகிறது.  மேலும் மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அறிவிக்கப்படும்.

மின்நிறுத்த நேரம்

பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை, அல்லது 9 காலை மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

பொறையார் துணை மின்நிலையம்

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மின்கோட்டத்திற்கு உட்பட்ட மயிலாடுதுறை, குத்தாலம் மற்றும் கடலங்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளைய தினம் 18.11.2025 செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என  உதவிசெயற்பொறியாளர் அருள்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

மயிலாடுதுறை துணை மின்நிலையம்

மூவலூர் மின்பாதை

* ஆர்கேபுரம்

* சித்தர்காடு

* மறையூர்

* அசிகாடு

* முருகன்தோட்டம்

* செங்குடி

குத்தாலம் துணை மின்நிலையம்

* மாதிரிமங்கலம்

கடலங்குடி துணை மின் நிலையம்

* முருகமங்கலம்

* மாங்குடி

* வானாதிராஜபுரம்

மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகள்

மாறுதலுக்கு உட்பட்டது

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

இந்த மாதாந்திரப் பராமரிப்புப் பணிக்காகக் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மின்சாரம் சார்ந்த தங்களது அத்தியாவசியத் தேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். தண்ணீர் சேமித்து வைத்தல், பேட்டரிகளை முழுமையாக மின்னூட்டம் செய்தல் போன்ற முன்னேற்பாடுகளைச் செய்து, மின் நிறுத்தம் காரணமாக ஏற்படும் சிரமங்களைத் தவிர்த்துக்கொள்ளுமாறு மயிலாடுதுறை மாவட்ட மயிலாடுதுறை மின்கோட்ட மின் வாரியம் சார்பில் அறிவுறுத்தியுள்ளது. பணிகள் நிறைவடைந்தவுடன், முன்னறிவிப்பின்றி மின் விநியோகம் உடனடியாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கன மழை பதிவாகி வரும் நிலையில் இந்த மாதாந்திர மின் பராமரிப்பு பணி தள்ளிபோக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Read Entire Article