மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர மற்றும் பருவகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்று (25.09.2026) வியாழக்கிழமை அன்று பல்வேறு முக்கிய நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் உதவி செயற்பொறியாளர்கள் சரவணன் மற்றும் ரமேஷ் தெரிவித்துள்ளனர்.

சீர்காழி கோட்டத்திற்குட்பட்ட பகுதிகள்

சீர்காழி கோட்டத்தைச் சேர்ந்த மோமாத்தூர் 33/11 KV துணை மின் நிலையத்தின் கீழ் இயங்கும் 11 KV கீழ்மாத்தூர் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வாழ்க்கை, வல்லம் மற்றும் வெள்ளதிடல் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதேபோல், பொறையார் 110/33/11 KV துணை மின் நிலையத்தின் கீழ் செயல்படும் CWSS.1 மற்றும் CWSS.2 குடிநீர் தொட்டி மின்பாதைகளில் பணிகள் நடைபெறுவதால் தில்லையாடி குடிநீர் தொட்டி, சூரிமேட்டை குடிநீர் தொட்டி, வளையசோழன் குடிநீர் தொட்டி, திருமெய்ஞானம் குடிநீர் தொட்டி, திருக்கடையூர் குடிநீர் தொட்டி மற்றும் பொறையார் குடிநீர் தொட்டி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் மின் இணைப்புகள் பாதிக்கப்படும்.

மேலும், கிடாரங்கொண்டான் 110/11 KV துணை மின் நிலையத்திற்குட்பட்ட ராதாநல்லூர் மின்பாதையில் பராமரிப்பு காரணமாக ராதாநல்லூர், ஆலங்காடு, ராதாநல்லூர் இளையமதுகூடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை மின்சாரம் இருக்காது.

மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள நகர்ப்புற/கிராமப்புற பகுதிகள்

மயிலாடுதுறை துணை மின் நிலையத்தைச் சேர்ந்த டவுன் II மின்பாதையில் ஸ்ரீ நகர் காலனி, ஆரோக்கியநாதபுரம், J.K. கார்டன், ரேவதி நகர், பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, புனுகீஸ்வரர் கோவில் வீதி, கஸ்தூரிபாய் தெரு, எடத்தெரு, பசுபதி தெரு, திருமஞ்சன வீதி, பாசிகடை தெரு, காக்கும் பிள்ளையார் கோவில் தெரு மற்றும் நீதிமன்ற வளாகம் ஆகிய இடங்களில் மின் தடை அமலில் இருக்கும். மேலும், வடகரை மின்பாதைக்கு உட்பட்ட எலும்பச்சம்பாத்தி, செருதியூர், வடகரை, அரங்ககுடி, கழனிவாசல் மற்றும் அன்னவாசல் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படும்.

நீடூர் துணை மின் நிலையத்தின்: கீழ் இயங்கும் மொழையூர் மின்பாதைக்குட்பட்ட மஜீத் காலனி, அருவாப்பாடி, அண்ணா நகர், கொற்றவநல்லூர், காக்கா தோப்பு, சோழசக்கரநல்லூர், கீழமருந்தாநல்லூர், மேலமருந்தாநல்லூர், பணிதலைமேடு மற்றும் பொன்மாசல்லூர் பகுதிகளிலும், பெரம்பூர் துணை மின் நிலையத்தின்: கடக்கம், பெரம்பூர், வதிஸ்ட்டாச்சேரி, கோவஞ்சேரி, முத்தூர் மற்றும் கிளியங்கலம் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் தடைபடும்.

காட்டுச்சேரி துணை மின் நிலையத்திற்கு: உட்பட்ட பூத்தானூர் மின்பாதையின் நல்லாடை, இலுப்பூர், சங்கரன்பந்தல், எரவாஞ்சேரி, கொங்கராமண்டபம் மற்றும் பட்டாவரம் ஆகிய இடங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படும்.

குத்தாலம், மேக்கிரிமங்கலம் மற்றும் ஏனைய பகுதிகள்

குத்தாலம் துணை மின் நிலையத்தைச் சேர்ந்த அரையபுரம் மின்பாதைக்குட்பட்ட சேத்திரபாலபுரம், தொழுதாலங்குடி, அரையபுரம், கீழவேலி ஆகிய இடங்களிலும், மாதிரிமங்கலம் மின்பாதைக்குட்பட்ட விக்கிரமகுத்தாலம், சிவராமபுரம், அகரசெம்பியநல்லூர், மாதிரிமங்கலம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைபடும். மேக்கிரிமங்கலம் துணை மின் நிலையத்தின் கீழ் மேக்கிரிமங்கலம், கச்சார், மாந்தட்டை, திருவாவடுதுறை, திருவாலங்காடு, T.பண்டாரவாடை, ஆனாங்கூர் மற்றும் குச்சிப்பாளையம் ஆகிய ஊர்களிலும் மின் விநியோகம் இருக்காது.

இவற்றுடன் கடலங்குடி துணை மின் நிலையத்தின்: வில்லியநல்லூர், ஆலங்குடி, திருமணஞ்சேரி ஆகிய பகுதிகளிலும், பாலையூர் துணை மின் நிலையத்தின் பாலையூர், பருத்திக்குடி, நல்லாவூர் ஆகிய இடங்களிலும் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் நிறுத்தம் அமலில் இருக்கும்.

பராமரிப்பு பணிகளின் காரணமாக ஏற்பாடுகள் விரைவாக முடிக்கப்பட்டு, பணிகள் நிறைவடைந்தவுடன் மின் விநியோகம் உடனுக்குடன் சீர் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைவரும் இத்தகவலை அறிந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், நிர்வாக காரணங்களை பொறுத்து மின் நிறுத்த நாளில் மாற்றம் ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.