Mayiladuthurai Power Shutdown (09.06.2026) :உங்க ஊர் இதுல இருக்கா? இன்று 8 மணி நேரம் கரண்ட் கட் - லிஸ்ட்டை வெளியிட்ட மின் வாரியம்!

1 hour ago 1
ARTICLE AD

மயிலாடுதுறை: மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட நீடூர் துணைமின் நிலையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 9) அன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், அன்று ஒரு நாள் மட்டும் நீடூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மயிலாடுதுறை நகர் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவு உதவி செயற் பொறியாளர் பொறியாளர் M. விஜயபாரதி B.E., தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;

பராமரிப்பு பணியின் நோக்கம்

தமிழ்நாடு மின் வாரியத்தின் விதிகளின்படி, மின் நுகர்வோருக்கு தடையற்ற மற்றும் சீரான மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மாதந்தோறும் துணைமின் நிலையங்களில் உயர் அழுத்த மின் பாதைகள், மின் மாற்றிகள் (Transformers) மற்றும் மின் கம்பிகளில் உள்ள பழுதுகளை நீக்கும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள முக்கிய துணைமின் நிலையங்களில் ஒன்றான நீடூர் துணைமின் நிலையத்தில் இன்றைய தினம் 09.06.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று அவசியமான மாதாந்திர பராமரிப்பு பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் (காலை 09.00 முதல் மாலை 05.00 மணி வரை) இந்த பராமரிப்பு பணிகள் தடையின்றி மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புடன் நடைபெறுவதற்காக, இத்துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறக்கூடிய பின்வரும் முக்கிய ஊர்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து கிராமப் பகுதிகளிலும் அன்றைய தினம் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் பாதிப்புக்குள்ளாகும் முக்கிய பகுதிகள்

* நீடூர்

* மல்லியக்கொல்லை

* வில்லியநல்லூர்

* கொண்டல்

* பாலாக்குடி

* தாழஞ்சேரி

* கொற்கை

* அருண்மொழிதேவன்

* கங்கணம்புத்தூர்

* மேலாநல்லூர்

* நடராஜபுரம்

* கீழமருதாந்தநல்லூர்

* மேலமருதாந்தநல்லூர்

* பொன்மாசநல்லூர்

* மாப்படுகை

* ஆனந்தக்குடி

* சோழப்பேட்டை

* மணலூர்

மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள பகுதிகளைச் சுற்றியுள்ள அனைத்து கிராமப்புறப் பகுதிகளுக்கும் இன்றை தினம் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் கூறப்பட்டுள்ளது.

மின் வாரியத்தின் வேண்டுகோள் மற்றும் முன்னெச்சரிக்கை

மின்சார வாரிய ஊழியர்கள் இப்பராமரிப்பு பணிகளைச் செவ்வனே செய்து முடிக்க ஏதுவாக, குறிப்பிட்ட நேரத்தில் மின்வாரியத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பொதுமக்கள் கவனத்திற்கு

அன்றைய தினம் மின்சாரம் தடைபட உள்ளதால், இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் சிறு குறு தொழிலகங்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியத் தேவைகளை (நீர் சேமிப்பு, மின் சாதனங்களை சார்ஜ் செய்தல் போன்றவை) முன்கூட்டியே திட்டமிட்டுத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

பணிகள் நிறைவு: பராமரிப்பு பணிகள் திட்டமிட்டபடி மாலை 5:00 மணிக்குள் முடிக்கப்பட்டு, அதன்பின் உடனடியாக மின் விநியோகம் வழக்கம்போல் சீராக வழங்கப்படும் என்றும், பணிகள் முன்கூட்டியே நிறைவடைந்தால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே மின் விநியோகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் மின் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மாறுதலுக்கு உட்பட்டது

மேலும் அன்றையதினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களைப் பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொதுமக்கள் தங்கள் மின்சாரம் சார்ந்த தேவைகளை முன்னாக திட்டமிட்டு ஏற்படும் சிரமங்களை தவிர்த்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Entire Article