Mayana kollai 2025: மயான கொள்ளை விழா உருவானது எப்படி: சுவாரசியமான தகவல் உங்களுக்காக..!

9 months ago 6
ARTICLE AD

மாசி அமாவாசை மயான கொள்ளை வரலாறு

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் அமாவாசையன்று அனைத்து அங்காளம்மன் கோயிலிலும் மயான கொள்ளையானது (mayna kollai) நடைபெறுகிறது. அம்பிகை பிரம்ம கபாலத்திற்காக சூரையிட்டதால். மாசி அமாவாசையன்று மயானத்தில் இன்றும் சூரையிடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்னை அனைத்து பேய், பிசாசுகளுக்கும் அன்று உணவை சூரையிடுகிறாள் என்பது ஐதீகம். அதை உண்டு அவற்றாள் தன் மக்களுக்கு எவ்வித தீங்கும் வரக்கூடாது என்பதற்காக சூரை இடப்படுகிறது.

அங்காளம்மன் வழிபாட்டின் சிறப்புகள் :

காட்டேரி, பாவாடை ராயன், அங்காளி வேடமிட்டவர்கள் ஆவேசமாக ஆடிக் கொண்டே அமாவாசையில் மயானத்திற்கு சென்று பூஜைகள் நடத்தி கிழங்கு, அவரை, முட்டை, சாதம் அனைத்தும் கலந்து சூரையாக வீசுக்கின்றனர். அதை எடுத்து சென்று விவசாய நிலத்தில் இட்டால் பயிர் செழிக்கும் என நம்புகின்றனர்.

மாசி மாத அமாவாசை தினத்தில், மயான கொள்ளை விழா, பொதுமக்களால் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம். சிவராத்திரி முடிந்த பின் வரும் அமாவாசை நாளில் மயான கொள்ளை நிகழ்ச்சி பெரும்பான்மையான இந்து மயானங்களில் நடக்கிறது.

இறந்த பிணங்களின் சாம்பல், மண் ஆகியவற்றால் 3 அல்லது 4 மீட்டர் நீளமுள்ள அம்மன் உருவம் படுத்திருப்பது போல் அழகுற செய்யப்படுகிறது. அன்று மாலை பூவால் செய்யப்பட்ட கரகம் சோடித்து, இரவு முழுவதும் அம்மன் ஊர்வலம் நடைபெறுகிறது. பின்னர் விடியற்காலையில் மயானத்திற்குச் சென்று அம்மனுக்குக் கண் திறந்து பம்பைக்காரர்கள் பாடல் பாடுவர்.

காளி வேடமிட்டு கொண்டு நேர்த்திக் கடன் வேண்டியவர்கள் ஆடி வருவார்கள். புடவை கட்டி, முகத்தில் சிகப்பு வண்ணம் பூசி, நீண்ட முடியுடன் ஒப்பனை செய்திருப்பர். அவர்களுள் ஒருவர் ஆட்டு ஈரல், எலும்பு துண்டுகள் போன்றவற்றை வாயில் கவ்வி கையில் தீச்சட்டி ஏந்தி வருவார். சேவல் பலி, பூசை, ஊர்வலம், முடிந்த பிறகு பூசாரி ஒப்பனை செய்துகொண்டு படுத்திருக்கும் அம்மன் தலைமீது ஆவேசமுற்று விழுவார்.

அப்போது அங்கு கூடியிருக்கும் மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த முருங்கைக்காய், மஞ்சள், கொழுக்கட்டை அதாவது வெண்டுதல் பொருள்களை  ஆகியவற்றை வான்நோக்கி வீசுவார்கள். அதை தங்கள் கைகளில் பிடிக்க மக்கள் முயற்சி செய்வார்கள். பூசாரி அம்மன் தலை மீது விழுந்தவுடன் அம்மன் உருவம் சிதைக்கப்படுகிறது. பின்னர் அம்மனை உருவாக்கியிருக்கும் சாம்பல், மண் போன்றவற்றைச் சண்டை போட்டுக் கொண்டு மக்கள் கொள்ளையடிக்கிறார்கள். அப்போது எடுக்கப்படும் மண் அல்லது சாம்பல் தீய சக்திகளையும், நோய்களையும் விரட்டும் ஆற்றல் வாய்ந்ததாகவும் மக்களால் நம்பப்படுகிறது.

மேல்மலையனூர் கோயில் தல வரலாறு

பிரம்மனின் ஆணவத்தை அழிக்க பரமேஸ்வரன் பிரம்மாவின் ஐந்தாவது தலையை வெட்டினார். இதனால் பிரம்மஹத்தி தோஷம் அவரைப் பற்றி கொண்டது. பிரம்மனின் ஐந்தாவது தலை சிவனின் கரத்தில் பிரம்ம கபாலமாக ஒட்டி கொண்டது. சரஸ்வதி தேவியின் சாபத்தால் சிவன் பிச்சாடண வடிவம் கொண்டு அலைந்தார். பார்வதியும் சிவனின்றி அகோர ரூபம் கொண்டு ஆவேசமாக சுற்றி திரிந்தார். இறுதியில் அன்னை மயான பூமியிலே ஒரு புற்றினுள்ளே பாம்புருவில் வாழ்ந்து வந்தாள்.

சிவன் பிச்சையெடுக்கும் உணவு அனைத்தையும் அந்த பிரம்ம கபாலம் உண்டு பசியோடு சக்தியற்று அலைய வைத்தது. இறுதியில் பரமேஸ்வரி வாழ்ந்து வந்த மயான பூமிக்கு வந்து சேர்ந்தார். மகா விஷ்ணுவின் அலோசனைப்படி உமையவள் புற்றிலிருந்து வெளியேறி பெண்ணுறு கொண்டு சிவனுக்கு உணவு சமைத்தாள்.

பிச்சை எடுக்க ஈசன் வந்ததும் அன்னபூரணியான அன்னை அவள் சமைத்த உணவை மூன்று கவளங்கலாக்கி கபாலத்தில் இடத் துவங்கினாள். முதல் கவளம் இட்டதும் கபாலம் உண்டது. இரண்டாவது கவளம் இட்டதும் கபாலமே உண்டது. உணவின் ருசியில் மயங்கியது. மூன்றாவது கவளத்தை அன்னை கபாலத்தில் இடாமல் சூரையாக வீசினால். அதை உண்ண கபாலம் கீழே இறங்கியது. ஆவேச வடிவம் கொண்டு அன்னை கீழே இறங்கிய கபாலத்தை காலில் மிதுத்து சுக்கு நூறாக்கினாள்.

அங்காளியாக மயான பூமியில் ஆவேச நடனம் புரிந்தாள். அவளை சாந்தபடுத்தவே முடியவில்லை, அங்காளி ஆடிய ஆட்டத்தில் அகிலமே அதிர்ந்து அஞ்சின. அன்னை பார்த்த அனைத்தும் அவள் கோப பார்வையில் பட்டு அழித்தன. தேவர்களும் பயந்து நடுங்கினர். போர் கோலம் பூண்டு தேரில் ஏறிப் பயணித்தாள். அம்பிகையை சாந்தப் படுத்த தேரின் அச்சாணியை மகா விஷ்ணு முறியச்செய்தார்.

தேர் உடைந்து அன்னை கீழே மல்லார்ந்தாள். மகா விஷ்ணு தனது தங்கையை தனது சக்தியால் அப்படியே கட்டுப்படுத்தினார். அம்பிகையும் ஆவேசம் தனிந்து நான்கு திருக்கரத்துடன் சூலம், கத்தி, உடுக்கை, கபாலத்துடன் எழுந்து அமர்ந்தாள். அங்கேயே அங்காள பரமேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு காட்சி கொடுத்தாள். அதுவே மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் ஆகும்.

Read Entire Article