இந்தியாவில் கார் தயாரிப்பில் முன்னணி நிறவனமாக திகழும் நிறுவனங்களில் முதன்மையானது மாருதி சுசுகி. மாருதி சுசுகி நிறுவனம் ஒவ்வொரு மாதமும் தனது கார்களுக்கு சலுகைகள் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், டிசம்பர் மாதம் தனது கார்களுக்கு சலுகைகள் அறிவித்துள்ளது.

WagonR காருக்கு சலுகை:

மாருதி நிறுவனத்தில் ஹேட்ச்பேக் கார்களில் வெற்றிகரமான படைப்புகளில் ஒன்று WagonR ஆகும். இந்த காருக்கு 2025ம் ஆண்டின் கடைசி மாதமான இந்த டிசம்பர் மாதம் ரூபாய் 58 ஆயிரத்து 100 தள்ளுபடி அளித்துள்ளது மாருதி சுசுகி நிறுவனம். முதன்முறை கார் வாங்க விரும்புபவர்கள், சிறிய குடும்பத்தினர் மற்றும் பட்ஜெட் விலையில் கார் வாங்க விரும்புபவர்களின் தேர்வாக இருக்கும் WagonR காருக்கு தள்ளுபடி அளித்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

WagonR காரின் தொடக்க விலை ரூபாய் 5 லட்சத்து 89 ஆயிரம் ஆகும். தற்போது 58 ஆயிரத்து 100 ரூபாய் தள்ளுபடி செய்திருப்பதால் ரூபாய் 5.31 லட்சத்திற்கே WagonR விற்பனைக்கு வருகிறது. இந்த காரின் டாப் வேரியண்ட் விலையே ரூபாய் 8.28 லட்சம்தான் ஆகும். இந்த காரில் மொத்தம் 12 வேரியண்ட்கள் உள்ளது.

வேரியண்ட்கள்:

1. Wagon R LXI 1.0 - ரூ.5.89 லட்சம்

2. Wagon R VXI 1.0 - ரூ.6.56 லட்சம்

3.Wagon R LXI 1.0 CNG - ரூ.6.99 லட்சம்

4. Wagon R VXI 1.0 AGS - ரூ.7.08 லட்சம்

5. Wagon R ZXI 1.2 - ரூ.7.13 லட்சம்

6. Wagon R VXI 1.0 CNG - ரூ.7.60 லட்சம்

7. Wagon R ZXI Plus 1.2 - ரூ.7.63 லட்சம்

8. Wagon R ZXI 1.2 AGS - ரூ. 7.65 லட்சம்

9. Wagon R ZXI Plus 1.2 Dual Tone - ரூ.7.76 லட்சம்

10. Wagon R ZXI Plus 1.2 AGS - ரூ.8.16 லட்சம்

11. Wagon R ZXI Plus 1.2 AGS Dual Tone - ரூ. 8.28 லட்சம்

12. Wagon R Flex Fuel - ரூ.8.50 லட்சம் ( விரைவில் அறிமுகம்)

மைலேஜ் எப்படி?

இந்த காரில் 5 வேரியண்ட் 998 சிசி திறன் கொண்டது. எஞ்சிய வேரியண்ட்கள் 1197 சிசி திறன் கொண்டது. இந்த கார் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி-யில் ஓடும் திறன் கொண்டது. அதிகபட்சமாக 24.43 கிலோ மீட்டர் மைலேஜ் தரும் திறன் கொண்டது. 56 பிஎச்பி ஆற்றல் கொண்டது.

நகர்ப்புறங்களில் ஓட்டுவதற்கு மிகவும் வசதியான கார் இதுவாகும். நெருக்கடியான பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கு இந்த கார் ஏற்ற கார் ஆகும். ஹேட்ச்பேக்கில் சிறந்த உட்கட்டமைப்பு கொண்ட கார் இதுவாகும்.

சிறப்பம்சங்கள்:

113 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது. 1.2 லிட்டர் டூயல் ஜெட் பெட்ரோல் எஞ்ஜின் கொண்டது. இந்த Wagon R காரில் முன்புறத்தில் 2 ஏர்பேக்குகள் உள்ளது. ஏபிஎஸ் மற்றும் இபிடி வசதி கொண்டது. ஸ்பீட் அலர்ட் சிஸ்டம் உள்ளது. பார்க்கிங் சென்சார் வசதி உள்ளது. பனி காலத்திலும் தெளிவாக பார்க்கும் அளவிற்கு முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. ஹில்ஹோல்ட் அசிஸ்ட் வதி உள்ளது.

இந்த கார் மாருதியில் செலரியோ, ஹுண்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ் , டாடா டியாகோ, ரெனால்ட் கிவிட் ஆகிய கார்களுக்கு போட்டியாக உள்ளது.