Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!

3 months ago 7
ARTICLE AD

இந்தியாவில் நடுத்தர குடும்பங்களின் பிரதான தேர்வாக மாருதி சுசுகி வேகன்ஆர் உள்ளது. குறிப்பாக எரிபொருள் செலவைக் குறைக்கும் இதன் சிஎன்ஜி மாடலுக்கான சுலபத் தவணை முறை மற்றும் காரின் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இஎம்ஐ திட்டம்

மாருதி வேகன்ஆர் சிஎன்ஜி மாடலை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், வெறும் ரூ. 2 லட்சம் முன்பணம் செலுத்தி காரை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். மீதமுள்ள தொகைக்கு வங்கி மூலம் வாகனக் கடன் பெற முடியும். காரின் ஆன்ரோடு விலை 7.35 லட்சம் எனும் சூழலில், மீதம் 5.35 லட்சம் ரூபாய்க்கு வட்டியும் அசலும் செலுத்த வேண்டும்.

தோராயமாக 9 முதல் 10 சதவீத வட்டி விகிதத்தில், 7 ஆண்டு காலத்திற்கு (84 மாதங்கள்) கடனைத் திருப்பிச் செலுத்தும் திட்டத்தைத் தேர்ந்தெடுத்தால், வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு தோராயமாக ரூ. 8,612 இஎம்ஐ செலுத்த வேண்டியிருக்கும். எனினும் டீலர்களைப் பொறுத்து ஆன்-ரோடு விலை மற்றும் தவணைத் தொகை சற்று மாறுபடலாம்.

இன்ஜின் மற்றும் மைலேஜ் எப்படி?

இந்த காரில் 1.0 லிட்டர் கே-சீரிஸ் டூயல் ஜெட், டூயல் விவிடி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சிஎன்ஜி மோடில் இயங்கும்போது, இது 56.69 bhp பவரையும், 82.1 Nm டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இது வருகிறது. மைலேஜைப் பொறுத்தவரை, ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 34.05 கி.மீ (ARAI சான்றிதழ்படி) அதிகப்படியான மைலேஜை இந்த கார் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள்

வேகன்ஆர் அதன் பிரத்யேக Tallboy வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதனால் காருக்குள் அமர்பவர்களுக்கு தாராளமான ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் கிடைக்கிறது. இதன் காரணமாகப் பயணங்கள் சௌகரியமாக இருக்கும்.

பாதுகாப்பு வசதிகளாக டூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. உட்புறத்தில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பவர் விண்டோஸ், மேனுவல் ஏசி உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் இடம்பெற்றுள்ளன.

காரின் பின்புறத்தில் சிஎன்ஜி சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளதால், பெட்ரோல் மாடலை விட இதில் பூட் ஸ்பேஸ் சற்று குறைவாக இருக்கும். குறைவான பட்ஜெட்டில் அதிக மைலேஜ் மற்றும் இடவசதி தேடுவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்.

Read Entire Article