மாருதி சுசுகி இறுதியாக தனது முதல் மின்சார SUVயான மாருதி சுசுகி இ விட்டாராவை இன்று, டிசம்பர் 2, 2025 இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த கார் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு பல முறை சோதனை செய்யப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு 2023ம் ஆண்டு eVX என்ற பெயரில் இந்த காரின் கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, கடந்த பாரத் மொபிலிட்டி ஷோவில் காரின் உற்பத்தி மாடல் காட்சிப்படுத்தப்பட்டது. ஏற்கனவே இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு எல்லாம் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்தியாவிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

வடிவமைப்பு மற்றும் தோற்றம்

e Vitaraவின் வடிவமைப்பு eVX மாடலை ஒத்தே உள்ளது,. இதன் முன்பக்கத்தில் மேட்ரிக்ஸ்-இணைக்கப்பட்ட LED ஹெட்லேம்ப்கள், மெலிதான LED டெயில்லேம்ப்கள் மற்றும் ஒரு நேர்த்தியான முன்பக்க கிரில் ஆகியவை உள்ளன. பின்பக்கத்தில் ட்ரை-ஸ்லாஷ் பகல் நேரங்களில் ஒளிரும் எல்இடி, ஸ்போர்ட்டி 225/50 R19 டயர் (AWD வேரியண்ட்களுக்கு மட்டுமே), முன்புற ஃப்ளாங்குகளில் சார்ஜிங் போர்ட் மற்றும் C-சி-பில்லர் பொருத்தப்பட்ட பின்புற கதவு கைப்பிடிகள் ஆகியவை அப்படியே பின்பற்றப்பட்டுள்ளன. புதிய மின்சார எஸ்யுவி ஆனது 4,275மிமீ நீளம், 1,800மிமீ அகலம் மற்றும் 1,635மிமீ உயரம் மற்றும் 2,700மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. து, இதில் நெக்ஸா ப்ளூ, ஆர்க்டிக் ஒயிட் மற்றும் ஓபுலண்ட் ரெட் போன்ற கலர்களில் கிடைக்கும்

பேட்டரி மற்றும் மைலேஜ்:

e Vitara இரண்டு பேட்டரி பேக்குகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது - 49 kWh மற்றும் 61 kWh. இது 120-செல் உயர் திறன் கொண்ட லித்தியம்-அயன் பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த காரின் சிறப்பம்சம் ALLGRIP-e 4WD அமைப்பு ஆகும். இந்த விலையில் 4WD உடன் வந்த இந்தியாவின் முதல் மின்சார SUV ஆகும். 61 kWh பேட்டரி மாடல் 172 bhp மற்றும் 300 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது, மேலும் ஒரு முறை சார்ஜ் செய்தால் 543 கிமீ வரை பயணிக்கலாம். இதில் DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி 50 நிமிடங்களில் 0–80% வரை சார்ஜ் செய்ய முடியும்.

5 ஸ்டார் ரேட்டிங்

பாதுகாப்பு அம்சங்களிலும் e Vitara மிகவும் வலிமையானது. இது Level-2 ADAS ஐ வழங்குகிறது, இதில் ஆட்டோ பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் அடங்கும். இந்த SUV ஏழு ஏர்பேக்குகள், TPMS, AVAS, பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகளுடன் வருகிறது. இந்த அம்சங்கள் இந்தியா NCAP இலிருந்து 5-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.

e விட்டாரா - முக்கிய அம்சங்கள்

Level-2 ADAS

ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங்

லேன் கீப் அசிஸ்ட்

பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர்

அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல்

மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள்:

7 ஏர்பேக்குகள்

TPMS (டைர் மொனிட்டரிங்)

AVAS

பார்க்கிங் சென்சார்கள்

பின்புற டிஸ்க் பிரேக்குகள்

உள்நாட்டில் e விட்டாரா மின்சார காரானது, ஹுண்டாய் க்ரேட்டா எலெக்ட்ரிக், மஹிந்த்ரா BE 6, MG ZS EV மற்றும் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள டாடா சியாரா மின்சார எடிஷனுடன் நேரடி சவாலாக உள்ளது