Maruti Suzuki Baleno Pice List: மாருதி சுசூகி நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான பலேனோ, 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

மாருதி சுசூகி பலேனோ..!

மாருதி சுசூகி நிறுவனம் தனது ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார் மாடலான பலேனோவின் மேம்படுத்தப்பட்ட எடிஷனை அண்மையில் இந்திய சந்தையில் அறிமுகப்படுதியது. திருத்தப்பட்ட டிசைன், லெவல் 2 ADAS உள்ளிட்ட புதிய அம்சங்கள் மற்றும் புதிய இன்ஜினும் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அதன் முழு விலைப்பட்டியலையும் இந்தோ-ஜப்பான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 5 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த காரின் விலையானது 5 லட்சத்து 99 ஆயிரத்தில் தொடங்கி 9 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் வரை (எக்ஸ் - ஷோரூம்) நீள்கிறது. பலேனோவில் இரண்டு சிஎன்ஜி வேரியண்ட்களும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுசூகி பலேனோ - விலை விவரங்கள்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள விலை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விவரங்கள் மட்டுமே ஆகும்.

வேரியண்ட்

பெட்ரோல் மேனுவல்

பெட்ரோல் ஆட்டோமேடிக்

பெட்ரோல் CNG மேனுவல்

சிக்மா

ரூ.5.99 லட்சம்

டெல்டா

ரூ.7.00 லட்சம்

ரூ.7.5 லட்சம்

ரூ.7.92 லட்சம்

ஜீடா

ரூ.8.00 லட்சம்

ரூ.8.5 லட்சம்

ரூ.8.92 லட்சம்

ஆல்பா

ரூ.9.10 லட்சம்

ரூ.9.60 லட்சம்

ஆல்பா (O)

ரூ.9.50 லட்சம்

ரூ.9.99 லட்சம்

மாருதி சுசூகி பலேனோ: ஆன் - ரோட்விலை விவரங்கள்

எக்ஸ் - ஷோரூம் விலை என்பது உற்பத்தி செலவை மட்டுமே அடிப்படையாக கொண்டதாகும். அதேநேரம் ஆன் - ரோட் விலை என்பது பதிவுக்கட்டணம், காப்பீடு மற்றும் இதர கட்டணங்களையும் உள்ளடக்கியதாகும். இந்த கட்டணங்கள் என்பது மாநிலம் மற்றும் நகரங்களுக்கு ஏற்ப மாறுபடும். அந்த வகையில் சென்னையில் பலேனோவின் ஒவ்வொரு வேரியண்டின் ஆன் ரோட் விலை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. CARWALE இணையதள முகவரி அடிப்படையில் இந்த ஆன் - ரோட் விலை விவரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

வேரியண்ட்

பெட்ரோல் மேனுவல்

பெட்ரோல் ஆட்டோமேடிக்

பெட்ரோல் CNG மேனுவல்

சிக்மா

ரூ.7.20 லட்சம்

டெல்டா

ரூ.8.38 லட்சம்

ரூ.8.96 லட்சம்

ரூ.9.46 லட்சம்

ஜீடா

ரூ.9.54 லட்சம்

ரூ.10.16 லட்சம்

ரூ.10.65 லட்சம்

ஆல்பா

ரூ.10.86 லட்சம்

ரூ.11.44 லட்சம்

ஆல்பா (O)

ரூ.11.32 லட்சம்

ரூ.11.90 லட்சம்

இதையும் படியுங்கள்: 250cc Bikes: 250cc பைக் ஓட்டி போரடிச்சிடுச்சா..! அப்க்ரேடில் உங்களுக்கான டாப் 5 மாடல்கள் - விலை, மைலேஜ், வசதி

மாருதி சுசூகி பலேனோ - EMI விவரங்கள்

குறைந்தபட்சமாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தினால் எண்ட்ரி லெவல் பலேனோ மாடலை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம். மீதமுள்ள 5 லட்சத்து 39 ஆயிரம் ரூபாயை வங்கியில் கடனாக பெற்று செலுத்தலாம். அதனை 10 சதவிகித வட்டியில் 60 மாதங்களில் திருப்பி செலுத்துவதாக இருந்தால், ஒவ்வொரு மாதமும் நீங்கள் 11 ஆயிரத்து 452 ரூபாயை தவணையாக செலுத்த வேண்டி இருக்கும். ஒட்டுமொத்தமாக முன்பணம் மற்றும் வட்டியுடன் கூடிய கடனை சேர்த்தால் 8 லட்சத்து 67 ஆயிரம் ரூபாயை செலுத்தி இந்த காரை நீங்கள் சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

பலேனோவை நீங்கள் வாங்கலாமா?

ப்ரீமியம் ஹேட்ச்பேக்கைத் தேடுபவர்களுக்கு மாருதி பலேனோ ஒரு நல்ல தேர்வாகும். இது பணத்திற்கு சிறந்த மதிப்பையும் சில கூடுதல் அம்சங்களையும் வழங்கினாலும், இன்னும் காம்பேக்ட் எஸ்யுவிகளின் ஆதிக்கப் பிரிவில்தான் உள்ளது. எஸ்யுவி மீதான மோகத்தைத் துரத்துவதற்குப் பதிலாக, ஒரு நல்ல, அம்சங்கள் நிறைந்த மற்றும் சிறந்த மைலேஜ் தரும் ஹேட்ச்பேக்கைப் பெறுவதே உங்கள் முன்னுரிமையாக இருந்தால், மாருதி பலேனோ ஒரு சரியான தேர்வாக இருக்கும்.