வாழை

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படம் கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது . குழந்தை நட்சத்திரங்கள் பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். கலையரசன் , நிகிலா விமல் , ஜே சதிஷ் குமார் , திவ்யா துரைசாமி , ஜானகி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் மற்ற கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்கள். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் , மாரி செல்வராஜின் நவ்வி ஸ்டுடியோஸ் , ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்புராயனின் ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.

மாரி செல்வராஜின் குழந்தை பருவத்தில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் வாழை. பள்ளி சிறுவனான சிவானந்தம்தான் கதையின் நாயகன். கதையின் நாயகனான சிவனைந்தமும், அவரது நண்பன் சேகரும் பள்ளி விடுமுறை நாட்களில் வாழை தார் சுமக்கும் வேலைக்குச் செல்கிறார்கள். வாழைத் தார் சுமக்கும் பணிக்கு வேண்டா வெறுப்புடன் செல்லும் சிவனைந்தத்தின் பள்ளி பருவத்தையும், அவனது குடும்ப சூழலையும், அவனது ஆசைகளையும், அவன் வாழைத் தார் சுமக்கும் பணிக்குச் செல்லாத அந்த ஒரு நாளில் நிகழும் சம்பவம் என்ன? என்பதையும் மிக மிக தத்ரூபமாக படமாக்கியுள்ளார் மாரிசெல்வராஜ்.

மாரி செல்வராஜ் வீட்டிற்கு சென்று பாராட்டிய திருமாவளவன்

வாழை திரைப்படத்தை பார்த்துவிட்டு வீட்டுக்கே நேரில் வந்து வாழ்த்தி இதயத்தை இறுகபற்றிக்கொண்ட அன்பு அண்ணன் தொல். திருமாவளவன் அவர்களுக்கு அன்பும் நன்றியும் ♥️♥️♥️♥️💐💐💐💐💐 @thirumaofficial pic.twitter.com/NFnHlBgWAc

— Mari Selvaraj (@mari_selvaraj) August 24, 2024

வாழை படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் உணர்ச்சிவசப்பட்டு கலங்கிய கண்களுடன் திரும்பியுள்ளார்கள்.

படம் பார்த்து முடித்து மாரி செல்வராஜை கட்டிபிடித்து முத்தம் கொடுப்பது என்பது ஒரு சடங்காக மாறும் அளவிற்கு அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இப்படியான நிலையில் வாழை படத்தை பார்வையிட்ட விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று அவரை பாராட்டியுள்ளார். மாரி செல்வராஜின் அன்னை, படத்தில் நடித்த பொன்வேல் மற்றும் ராகுல் ஆகிய இருவர் பொன்னாடை போர்த்தி திருமா கெளரவித்தும் உள்ளார்.

வாழை திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் பெரியளவில் வெற்றிபெற்றுள்ளது. படம் வெளியாகிய இரண்டு நாட்களில் வாழை 3 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன