Manoj Tiwary: கம்பீர் வந்த பிறகு ரோஹித்துக்கு விழுந்த அடி! - உண்மையை உடைக்கும் மனோஜ் திவாரி.

3 months ago 8
ARTICLE AD

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டது மற்றும் சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்த விவகாரம் தற்போது மீண்டும் சூடுப்பிடிக்க துவங்கியுள்ளது. இந்திய அணியின் முன்னாள்  வீரர் மனோஜ் திவாரி, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோரை தாக்கி பேசியுள்ளார்.

முடிவுக்கு வந்த ரோஹித் - கோலி யுகம்?

கடந்த 2024 அக்டோபரில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது, சுப்மன் கில்லின் பெயருக்கு பின்னால் 'கேப்டன்' என்ற சொல் சேர்க்கப்பட்டது. இது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் சகாப்தம் முடிவுக்கு வருவதை ரசிகர்களுக்கு உணர்த்தியது. சில மாதங்களுக்கு முன்புதான் இந்தியாவின் கேப்டனாக இருந்து சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்த போதிலும், ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

யாரோ தூண்டிவிடுகிறார்கள்:

இந்த விவகாரம் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய மனோஜ் திவாரி, ரோஹித் சர்மாவை பதவியில் இருந்து நீக்கிய முடிவின் பின்னணியில் மறைமுகமான அழுத்தங்கள் இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அஜித் அகர்கர் ஒரு வலுவான ஆளுமை கொண்டவர் மற்றும் கடினமான முடிவுகளை எடுக்கக் கூடியவர் என்றாலும், இந்த விஷயத்தில் யாராவது அவரைத் தூண்டிவிட்டார்களா என்பதை நாம் ஆராய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

கௌதம் கம்பீர் மீது மறைமுக விமர்சனம்

இந்த முடிவில் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் பங்கும் இருப்பதாக திவாரி சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய பெரிய முடிவுகளை ஒருவர் மட்டும் தனித்து எடுக்க முடியாது என்றும், பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவர் ஆகிய இருவருக்குமே இதில் சமமான பொறுப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். கம்பீரின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், பயிற்சியாளரின் தலையீடு இல்லாமல் இது நடந்திருக்க வாய்ப்பில்லை என்ற கோணத்தில் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

வீரரை அவமதிப்பதாகத் தோன்றுகிறது

தற்போதைய ஒருநாள் அணியின் பிளேயிங் லெவன் தேர்விலும் தொடர்ந்து தவறுகள் நடப்பதாக மனோஜ் திவாரி குற்றம் சாட்டியுள்ளார். டி20 உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்து வெற்றிகளைத் தேடித்தந்த ஒரு கேப்டனை, திடீரென மாற்றுவது தேவையற்றது என்றார். ரோஹித் சர்மாவுடன் விளையாடிய அனுபவம் தனக்கு இருப்பதாகவும், கிரிக்கெட் உலகிற்கு இவ்வளவு பங்களிப்பு செய்த ஒரு வீரரை இவ்வாறான முறையில் நடத்துவது அவரை அவமதிப்பதாகவே தனக்குத் தோன்றுவதாகவும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.

அணியில் தொடரும் குழப்பங்கள்

ஏற்கனவே அர்ஷ்தீப் சிங்கை கையாளும் விதம் குறித்து மூத்த வீரர் ஆர். அஷ்வின் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், தற்போது மனோஜ் திவாரியின் இந்த கருத்துக்கள் இந்திய அணியின் நிர்வாகம் மற்றும் கௌதம் கம்பீரின் தலைமைத்துவத்தின் கீழ் நடக்கும் மாற்றங்கள் குறித்து பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

Read Entire Article