டெல்லி முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, கடந்த ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.

நிபந்தனை ஜாமீன்

மணிஷ் சிசோடியா ரூ.10 லட்சம் செலுத்துவதோடு, பாஸ்போர்ட்டையும் ஒப்படைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு, ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.