<p>மக்களவை தேர்தலில் கிடைத்த வெற்றி இந்திய மக்களுக்கான வெற்றி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். </p>
<p>மேற்கு வங்கத்தில் 30 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றதை அடுத்து, மம்தா பானர்ஜி காளிகாட்டில் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். ‘மோடி நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன. அவர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்.</p>
<p>இவ்வளவு கொடுமைகள் செய்த பிறகும், இவ்வளவு பணம் செலவழித்தும், மோடி மற்றும் அமித்ஷாவின் வியூகம் தோற்றுவிட்டது. அயோத்தியிலும் தோற்றுவிட்டார்கள். இந்தியா வென்றது. மோடி தோற்றுவிட்டார்” எனத் தெரிவித்தார். </p>
<p>மொத்தமுள்ள 42 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 29 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும், காங்கிரஸுக்கு 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் காங்கிரஸின் ஆதிர் சவுத்ரியை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார். </p>