Malaika Arora: பிரபல நடிகையின் தந்தை உயிரிழப்பு - 6 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை, காரணம் என்ன?

1 year ago 7
ARTICLE AD

Malaika Arora: பிரபல நடிகை மலைகா அரோராவின் தந்தை தற்கொலைக்கான காரணம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலைகா அரோராவின் தந்தை தற்கொலை:

மலைகா அரோராவின் தந்தை அனில் அரோரா பாந்த்ராவில் உள்ள தனது வீட்டின், ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தச் செய்தி வெளியானத தொடர்ந்து, புனேவில் இருந்து மலைகா அரோரா மும்பைக்குப் புறப்பட்டுள்ளார்.  தற்போது அனில் அரோராவின் உடல் பாபா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை.

இந்த செய்தி அறிந்தவுடன் மலைகாவின் முன்னாள் கணவர் அர்பாஸ் கான், மலைக்காவின் வீட்டிற்கு வந்துள்ளார். பாலிவுட் திரையுலகை சேர்ந்த பலரும், மலைகா அரோராவின் வீட்டிற்கு விரைந்துள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் தொடர்வதாகவும் போலிசார் தெரிவித்தனர்.  பாந்த்ரா காவல்துறை மற்றும் குற்றப்பிரிவு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. தற்போது வரை காவல்துறையினருக்கு அந்த இடத்தில் இருந்து தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை. மலைகாவின் தந்தை சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

Read Entire Article