Mahindra Upcoming Cars: புதுசா 9 மாடல்கள், 6 EV, மொத்தமா 19 கார்கள்..! SUV உலகை ஆள மஹிந்த்ராவின் அதிரடி லைன் - அப்

1 month ago 7
ARTICLE AD

Mahindra Upcoming Cars: மஹிந்த்ரா நிறுவனம் புதியதாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள 16 மாடல்களில், 6 கார்கள் மின்சார வாகனங்களாகும்.

16 கார்களை களமிறக்கும் மஹிந்த்ரா

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது போர்ட்ஃபோலியோவை விரிபடுத்தும்நோக்கில், வரும் 2031ம் ஆண்டுக்குள் 16 கார் மாடல்களை அறிவிக்க உள்ளதாக மஹிந்த்ரா நிறுவனம் அறிவித்துள்ளது. புதியாகா விற்பனைக்கு வரவுள்ள கார்களின் பட்டியலில் 10 மாடல்கள் இன்ஜின் அடிப்படையில் இயங்குபவை எனவும், 6 மாடல்கள் மின்சார வாகனங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிகவும் கவனத்தை ஈர்கக் கூடிய விஷயமாக, புதியதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள இன்ஜின் அடிப்படையிலான 10 கார்களில் ஒன்பது மாடல்கள் முற்றிலும் புதிய பெயரில் அறிமுகமாக உள்ளன.

2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவே உள்நாட்டு நிறுவனமானது 4 புதிய இன்ஜின் அடிப்படையிலான கார்கள் மற்றும் 3 மின்சார கார்கள் சந்தைப்படுத்தப்பட்டு இருக்குமென கூறப்படுகிறது. பழைய திட்டத்தின்படி, 2030ம் ஆண்டுக்குள் 7 புதிய கார்களை அறிமுகப்படுத்த இலக்கு நிர்ணயித்து இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கையானது 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மஹிந்த்ராவின் புதிய மாடல்கள் - என்ன எதிர்பார்க்கலாம்?

புதிய கார் மாடல்கள் தொடர்பான தகவல்கள் எதையும் மஹிந்த்ரா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் அடுத்த சில மாதங்களில் சந்தைப்படுத்தப்பட உள்ள மாடல்களில், ஸ்கார்ப்பியோ என் மற்றும் தார் 3 டோர் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் எடிஷன்களாக இருக்கும் என கூறப்படுகிறது. இதுபோக இந்த கார் நிறுவனமானது புதிய NU_IQ ப்ளாட்ஃபார்ம் அடிப்படையிலான மாடல்களையும் தயாரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் NU_IQ ப்ளாட்ஃபார்மை கொண்டு உருவாகும் விஷன் S, விஷன் X, விஷன் T மற்றும் விஷன் SXT ஆகிய கார் மாடல்களை காட்சிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

NU_IQ அடிப்படையிலான எஸ்யுவிக்கள்:

மஹிந்திரா விஷன் எஸ் கான்செப்ட் அடிப்படையிலான எஸ்யூவி, 2027-ஆம் ஆண்டுக்குள் ரக்கட் ஆன ஸ்கார்பியோ பிரிவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஸ்யூவி, XUV 3XO-விற்கும் சக்தியளிக்கும் மஹிந்திராவின் 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனை பெறக்கூடும். பெட்ரோல் மற்றும் ஹைப்ரிட் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷன் எக்ஸ், புதிய தலைமுறை மஹிந்திரா XUV 3XO-விற்கு ஒரு வடிவமைப்பு முன்னேற்றமாக அமையக்கூடும். அதே நேரத்தில் விஷன் T, தார் காரின் எலெக்ட்ரிக் எடிஷனாக இருக்கும் என கூறப்படுகிறது.

மஹிந்த்ராவின் புதிய மின்சார 7 சீட்டர்

2027-ல் உற்பத்திக்குத் தயாராக உள்ள BE.07 மாடலுடன் தனது மின்சார வாகன பிரிவை மஹிந்த்ரா விரிவுபடுத்த உள்ளது. சந்தைபடுத்தலின் போது, ​​இந்த மின்சார எஸ்யூவி புதிய பெயரைக் கொண்டிருக்கும் மற்றும் ப்ராண்டின் BE6 மாடலுக்கு மேல் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த காரானது உள்ளூர் சந்தையில் வின்ஃபாஸ்ட் VF7 மற்றும் டாடா ஹாரியர் EV ஆகியவற்றுடன் போட்டியிட உள்ளது. XEV 9e மற்றும் BE 6 மாடல்களைப் போலவே, மஹிந்திரா BE.07 மாடலும் INGLO பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. 60kWh முதல் 80kWh வரையிலான பேட்டரி பேக்குகளுடன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Read Entire Article