இந்தியாவில் பிரபலமான கார் நிறுவனங்களில் முக்கியமானது மஹிந்திரா. எஸ்யூவி ரக கார்கள் தயாரிப்பில் மிகவும் முதன்மையான கார் தயாரிப்பு நிறுவனமாக மஹிந்திரா உள்ளது.

மஹிந்திரா நிறுவனம் சந்தையில் களமிறக்க உள்ள புதிய 3 கார்கள் என்னென்ன? எப்போது வருகிறது? என்பதை கீழே காணலாம்.

1. Mahindra Scorpio N facelift

2.Mahindra Vision S

3. Mahindra Vision X

1. Mahindra Scorpio N facelift:

மஹிந்திரா நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான படைப்பு Mahindra Scorpio. இதன் லேட்டஸ்ட் அப்டேட் வெர்சனாக இருப்பது Mahindra Scorpio N facelift ஆகும். இந்தாண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாத இடைவெளியில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த காரில் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின், 2.2 லிட்டர் டீசல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட் வாகனங்கள் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காரில் 6 கியர்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமெட்டிக் வெர்சனில் இந்த கார் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்யூவி ரக காரான இந்த காரி் 2184 சிசி திறன் கொண்ட எஞ்ஜின பொருத்தப்பட உள்ளது. இதன் விலை ரூபாய் 14 லட்சம் முதல் ரூபாய் 26 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.

2. Mahindra Vision S:

மஹிந்திரா நிறுவனத்தின் புதிய படைப்பாக அறிமுகமாக உள்ளது Mahindra Vision S . இந்த காரின் விலை ரூபாய் 7.50 லட்சம் முதல் ரூபாய் 13 லட்சம் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஸ்கார்பியோ குடும்பத்தைச் சேர்ந்த காராக இந்த கார் அறிமுகமாக உள்ளது. மாருதி சுசுகியின் ப்ரெஸா, ஹுண்டாயின் வெனுயூ, நெக்ஸான், சோனட் காருக்கு போட்டியாக இந்த கார் அறிமுகமாக உள்ளது.

பெட்ரோலில் ஓடும் வகையில் ஆட்டோமெட்டிக் வெர்சனாக இந்த கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பனோரமிக் சன்ரூஃப் மேற்கூரை பொருத்தப்பட உள்ளது. எஸ்யூவி ரக காரான இந்த கார் அடுத்தாண்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

3. Mahindra Vision X:

மஹிந்திரா தயாரிப்பில் உருவாக உள்ள புதிய கார் Mahindra Vision X ஆகும். இந்த கார் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த கார் ரூபாய் 25 லட்சம் முதல் ரூபாய் 30 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. எஸ்யூவி ரக காரான இந்த கார் அடுத்தாண்டு சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இரண்டு ஸ்கிரீன் செட்டப் இடம்பெற உள்ளது. இதன் கேபின் பல்வேறு சிறப்பம்சங்களுடன் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோலில் ஓடும் வகையில் ஆட்டோமெட்டிக் வெர்சனாக இந்த கார் உருவாக உள்ளது.

இந்த கார்கள் இந்திய சந்தையில் அறிமுகமானால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.