டீ ப்ரியர்களுக்கு.. இது ஷாக்கிங்கான நியூஸ் ஆக இருக்கும். சமூக வலைதளங்களில் அவ்வபோது விசித்திரமான உணவுகள் வைரல் ஆகும். சாக்லேட் தோசை, ஐஸ் க்ரீம் தோசை, ஓரியோ மேகி, Fanta மேகி என்ற வரிசையில் புதிதாக ஒன்று சேர்ந்துள்ளது. அது என்னவென்று தெரிந்தால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள்.

புதிதாக உணவு தயாரிக்கிறோம் என்று பெயரில் சிலர் Weird என்று சொல்லும் அளவில் இருக்கிறது என ஒருசாரார் சொல்கின்றனர். அப்படி என்ன இப்போது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது என்றால், ‘ Maggi in Chai'. என்னது டீயில் மேஜியா? டீ சாப்பிடும்போது, சூடாக வாழைக்காய் பஜ்ஜி, பக்கோடா, முறுக்கு, மிக்சர் என சாப்பிடும் வழக்கம் உண்டு. இதுவும் சிலரின் தேர்வாக இருக்காது. அப்படியிருக்கையில், சூடான டீயில் மேகி சேர்த்து சாப்பிடுவது எப்படி இருக்கும் என ஸ்விக்கி ஒரு போஸ்ட் செய்துள்ளது. “Maggi with chai or Maggi in chai? என கேட்டுள்ளது.

maggi with chai or maggi in chai? pic.twitter.com/W5toKjQf7m

— Swiggy Food (@Swiggy) March 6, 2025

நெட்டிசன்ஸ் ரியாக்சன்:

டீயில் மேகி சேர்த்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று பதவிட்டுள்ள போஸ்ட்டில் பலரும் கமெண்ட் செய்துள்ளனர். ஒருவர் ‘ இப்படியான ஒன்றை கண்டறிந்தவர்களை சபிக்கிறேன்.’ என்று கமெண்ட் செய்துள்ளார். ‘ இது உண்மையா’? ‘இது ஆரோக்கியமானதா?’ என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர்.