Karur By Election 2026: கரூர் இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் போட்டியா? ஐடியா கொடுத்த செந்தில் பாலாஜி!

1 hour ago 1
ARTICLE AD

தமிழ்நாட்டில் தவெக தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் சமீீபத்தில் நடைபெற்ற தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக அபார வெற்றி பெற்றது.

கரூரில் போட்டியிடுகிறாரா மு.க.ஸ்டாலின்?

தமிழ்நாட்டில் இன்னும் கரூர், அம்பாசமுத்திரம், விராலிமலை, திருச்சி கிழக்கு மற்றும் பெருந்துறை ஆகிய தொகுதிகள் காலியாக உள்ளது. இதில் திருச்சி கிழக்கு தவிர எஞ்சிய 4 தொகுதிகள் அதிமுக வசம் இருந்தவை. அதிமுக-வைக் காட்டிலும் தவெக-வே தற்போது திமுக-விற்கு மிகப்பெரிய அரசியல் எதிரியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, மு.க.ஸ்டாலினே தோற்றதால் தவெக-வை வீழ்த்தியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் திமுக-வினர் உள்ளனர்.

இந்த நிலையில், சமீபத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செந்தில்பாலாஜி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, அவரிடம் கரூர் தொகுதியில் போட்டியிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதிமுக கோட்டையான தாராபுரத்திலே அதிமுக-வைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்துவிட்டதால் கரூரில் போட்டியிட்டால் கண்டிப்பாக வெற்றி பெற்றுவிடலாம் என்று மு.க.ஸ்டாலினிடம் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

என்ன முடிவு எடுப்பார்?

செந்தில் பாலாஜி கூறியதை கவனமாக கேட்டுக்கொண்ட மு.க.ஸ்டாலின் எந்தவொரு பதிலும் கூறவில்லை. கரூரைப் பொறுத்தமட்டில் செந்தில் பாலாஜி தனக்கென தனி செல்வாக்கு கொண்டவராக இருப்பதால் அவரை நம்பி களமிறங்கினால் வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.
தவெக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் களமிறங்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலினை களமிறக்க வெற்றி பெறச் செய்து மீண்டும் அவரை சட்டசபைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று திமுக-வினர் தீவிரமாக இருந்தாலும், மறுபக்கம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தால் அது மிக மோசமான விளைவுகளை திமுக-விற்கு ஏற்படுத்தும் என்ற அச்சமும் இருக்கிறது. ஏனென்றால், தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இடைத்தேர்தல் என்றாலே வெற்றி வாய்ப்பு பொதுவாக ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது.

களத்தில் விஜய்:

இதனால், கரூரில் களமிறங்குவது குறித்து சிந்தித்தே முடிவு எடுக்கலாம் என்று சிலர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் முதலமைச்சர் விஜய் தீவிரமாக நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக நேரில் சென்று கொண்டிருக்கிறார். இது ஒரு வகையில் அந்தந்த தொகுதிகளுக்கான பரப்புரையாகவே பார்க்கப்படுகிறது.

இடைத்தேர்தலில் எஞ்சிய 5 தொகுதிகளையும் கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற விடாப்பிடியுடன் விஜய் உள்ளார். இந்த வெற்றி மூலமாக தனது ஆட்சியை மேலும் வலுப்படுத்த விஜய் தீவிரமாக களப்பணியாற்ற கட்சியினருக்கம் உத்தரவிட்டுள்ளார். இதனால், களமிறங்கினால் கண்டிப்பாக வெற்றி வாய்ப்பு உறுதி என்றால் மட்டுமே மு.க.ஸ்டாலின் மீண்டும் களத்தில் இறங்குவார் என்று கருதப்படுகிறது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கும் என்பது உறுதி.

Read Entire Article